ஆட்டோ மீது பைக் மோதி விபத்து.. துடிக்க துடிக்க உயிரிழந்த கூலித் தொழிலாளி.. உடன்குடியில் நேர்ந்த சோகம்!

Kanyakumari Accident Dies: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் அதி வேகமாக மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க உயிரிழந்தார். இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ மீது பைக் மோதி விபத்து.. துடிக்க துடிக்க உயிரிழந்த கூலித் தொழிலாளி.. உடன்குடியில் நேர்ந்த சோகம்!

மாதிரி புகைப்படம்

Published: 

03 May 2026 18:02 PM

 IST

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை மதுசூதனபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கணேஷ் ( 31 வயது). இவர், அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை ( மே 2- ஆம் தேதி) கணேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது வாகனம் செட்டியாபத்து அருகே சென்ற போது சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், கணேஷ் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில், கணைஷுக்கு தலையில் பலத்த காயம் அடைந்ததுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இந்த விபத்து சத்தம் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையில் விழுந்து கிடந்த கணேசை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

தீவிர சிகிச்சை பிரிவில் பிரிந்த தொழிலாளி உயிர்

அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து விட்டு தீவிர சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, கூலித் தொழிலாளி கணேஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி கணேஷ் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: பழனிக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கிய ஆந்திர குடும்பம்.. பச்சிளம் குழந்தை உப்டப 3 பேர் பலி!

குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்த கூலித் தொழிலாளி கணேசின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய சரக்கு வாகன ஓட்டுநரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளி குடும்பத்தினர் இடையே சோகம்

இதில், கூலித் தொழிலாளி கணேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற காரணத்தால் பைக் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தினர் மட்டுமின்றி கிராமத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பைக் ஓட்டி மீது விழுந்த ராட்சத விளம்பர பேனர்.. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்!!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..