காதலன் குறித்து கணவனுக்கு கடிதம் எழுதிய போலீஸ் மனைவி.. விஷம் குடித்து தற்கொலை!

Woman Police Killed Herself After | கடலூரில் பெண் காவலர் சோனியா தனது மரணத்திற்கு தனது காதலன் தான் காரணம் என கணவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு தற்கொல செய்துக்கொண்டுள்ளார். தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிய நிலையில், தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

காதலன் குறித்து கணவனுக்கு கடிதம் எழுதிய போலீஸ் மனைவி.. விஷம் குடித்து தற்கொலை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Jul 2025 15:05 PM

 IST

கடலூர், ஜூலை 04 : கடலூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளம் பெண் ஒருவர் காதலன் குறித்து தனது கணவனுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மரணத்திற்கு தனது காதலன் தான் முழுக்க முழுக்க காரணம் என கூறியுள்ள அந்த பெண் கூறியுள்ள நிலையில் அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இளம் பெண் தனது கணவனுக்கு அனுப்பிய தற்கொலை கடிதத்தில் சில பகீர் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த சோனியா

கடலூர் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா. 26 வயதான இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கார் ஓட்டுனர் முகிலன் என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், மகள் முகிலுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், முகிலனை தொடர்பு கொண்ட சோனியா தனது மகனை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை ஏற்ற முகிலன் மகளை அழைத்து சென்று சோனியாவிடம் காட்டியுள்ளார். இதனை அடுத்து மூன்று பேரும் சந்தித்த நேரம் செலவு வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜூலை 1, 2025 அன்று, முகிலனை தொடர்பு கொண்ட சோனியா தான் விஷம் குடித்து விட்டதாகவும் தனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ளும் படியும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த முகிலன் உடனடியாக சோனியா இருக்கும் இடத்திற்கு சென்று உறவினரின் உதவியுடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பயன் அளிக்காமல் சோனியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தற்கொலை கடிதம் மூலம் தெரிய வந்த உண்மை

தான் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை புகைப்படம் எடுத்து சோனியா தனது கணவருக்கு வாட்ஸ்அப் மூலமா அனுப்பி வைத்துள்ளார். அதில், சென்னை ஆவடியில் பணிபுரிந்த அவருக்கு அங்குள்ள ஒரு காவலருடன், பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் அது இருவருக்கும் இடையே திருமணத்தை மீறி உறவாக மாறிய நிலையில் தான் மூன்று மாதம் கர்ப்பமானதாகும் அவர் கூறியுள்ளார். ஆனால் தனது காதலன் தன் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்றும் கணவர் முகிலனிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே உன்னை திருமணம் செய்து கொள்வேன் எனவும் மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக புகார் அளித்த போது உயர் அதிகாரிகள் தன்னை மட்டுமே ஒருதலை பட்சமாக விசாரணை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை தொடர்ந்து தனக்கு பணியின் போது அதிக பணி வழங்கப்பட்ட நிலையில் தனது கர்ப்பம் திடீரென கலைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே எனது மரணத்திற்கு அந்த போலீஸ்காரர் மட்டுமே காரணம் என்றும் தனது குடும்பத்தினருக்கும் கணவர் மற்றும் மகள் யாரையும் விசாரிக்க வேண்டாம் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜின் படத்துக்கு அனிருத்தின் சம்பளம் இவ்வளவா?
பிரபாஸ் மற்றும் எகோ பட இயக்குநர் சந்திப்பு
தன்னை தாக்க வந்த சிறுத்தையை கற்களால் அடித்து கொன்ற 18 வயது இளைஞர்..
வாடிக்கையாளரை தாக்கிய ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. நடந்தது என்ன?