AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாவட்ட செயலாளர்களுடன் மீட்டிங்.. அட்வைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Tamil Nadu CM MK Stalin : 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். அக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அடக்க நினைத்தால் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம் எனவும் இது தான் தமிழர்களின் தனி குணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுடன் மீட்டிங்.. அட்வைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 28 Jun 2025 22:09 PM IST

சென்னை, ஜூன் 28 : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். குறிப்பாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற காமன் டிபி ஆக கட்டாயம் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், தேர்தல் குறித்தும் சில விஷயங்களை மாவட்ட செயலாளர்களிடம் பகிர்ந்துள்ளார். 2025 ஜூன் 28ஆம் தேதியான இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தொகுதி வாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும், அக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கை மட்டுமில்லை.

இது தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க எல்லாரும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தவர்களை விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும். கீழடி உண்மைகளை புதைக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாவட்ட செயலாளர்கள் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

இந்தி மொழியை நம் விருப்பம் இல்லாமல் திணிக்கிறார்கள். கல்வித்துறை நிதியை விடுவிக்காமல் இருக்கிறார். மாநில உரிமைகளை பறிக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு மூலமாக நாடாளுமன்ற பலத்தை குறைக்க முயற்சி. பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என அனைத்து வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்.

ஊதினால் நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரிய. நம்மை அணைக்க நினைத்தால், மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கம் இதுதான். வாட்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஓரணியில் தமிழ்நாடு என்ற லோகோவை காமன் டிபி ஆக கட்டாயம் வைக்க வேண்டும்” என இவ்வாறு ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் அனைத்து கட்சிகளை தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, திமுக மீண்டும் ஆட்சி தக்க வைக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், அதிமுக ஆட்சியை பிடிக்க வியூகம் அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us