விஜய்யை இமை போல காக்கும் 6 அடி உயர மனிதன்.. 360 கோணத்தில் சுழலும் பாதுகாப்பு அரண்.. யார் இந்த நயீம் மூசா!
TVK leader Vijay Body Guard Naeem Musa: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை இமை போல பாதுகாத்து வரும் நபர் தான் பவுன்சர் நயீம் மூசா. யார் இவர் இவரை பற்றிய முழு விவரத்தை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

விஜய்க்கு அரணாக விளங்கும் நயீம் மூசா யார் இவர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்து தற்போது வரை பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும்போதெல்லாம் அவருடன் 6 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டு விஜயை 360 டிகிரி கோணத்தில் ஒருவர் பாதுகாத்து வருவதை நாம் பார்த்திருப்போம். விஜய்யின் அருகிலேயே நிற்பதால் யார் இவர் என்ற கேள்வி நம் மனதில் எழுந்திருக்கும். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. ஆம்… அந்த நபர் பெயர் நயீம் மூசா. இவர், கேரள மாநிலத்தில் உள்ள மாஹே பிராந்தியத்தை சேர்ந்தவர் ஆவார். சிறு வயது முதலே பாடிபில்டிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருபவர் ஆவார். இளமை காலத்தில் துபாயில் பணிபுரிவதற்காக நயீம் மூசா சென்றார். அப்போது, 2004- ஆம் ஆண்டில் செக்யூரிட்டி சர்வீஸ் பிசினஸ் தொடங்கலாம் என்று திட்டமிட்டார். அதன்படி, துபாயில் 2008- ஆம் ஆண்டு Gentur Security செக்யூரிட்டி சர்வீஸ் கம்பெனி தொடங்கினார்.
இந்திய பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மூசா டீம்
உலகில் பிரபலமானவர்கள் துபாய்க்கு செல்லும்போது, அங்குள்ள சட்ட நடைமுறைகள் தெரிந்த மூசாவின் செக்யூரிட்டி சர்வீஸை அணுகுவது வழக்கமாகும். வெளிநாடுகளை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி, இந்தியாவை சேர்ந்த அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான், சல்மான்கான், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் துபாய்க்கு சென்றாலும், அவர்களுக்கு மூசா செக்யூரிட்டி சர்வீஸ் தான் முழுமையான பாதுகாப்பு வழங்கும். இவர்கள், பவுன்சர்கள் மட்டுமின்றி முழு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். அதாவது, செலிபிரிட்டி எப்போது வர வேண்டும், எந்த கேட் வழியாக வரவேண்டும், எந்த வழி வழியாக வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்கள்.
மேலும் படிக்க: மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!
விஜய் மாநாட்டில் முக்கிய பங்கு பெற்ற மூசா
இவர்கள் அனுமதியின்றி யாரும் பிரபலங்களை நெருங்க கூட முடியாது. அதன்படி, விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டு பகுதியில் என்னென்ன பிரச்சனைகள் எழும், வெளியிலிருந்து யாராவது விஜயை நோக்கி வர முயற்சிப்பார்களா என்பது தொடர்பாக முன்னதாகவே அந்த பகுதியில் மூசா ஆய்வு செய்து, மாநாட்டின் போது விஜயை யாரும் நெருங்காத வகையில் பார்த்து கொண்டதில் முக்கிய பங்கு உள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஒய் பிரிவு போலீசார் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில், அவர்களுடன் இணைந்து மூஸா தலையிலான செக்யூரிட்டி சர்வீசஸ் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
விஜய்க்கு 360 டிகிரி கோணத்தில் பாதுகாப்பு வழங்கும் மூசா
தமிழக வெற்றி கழகம் தொடங்குவதற்கு முன்பே விஜய் நடத்திய கல்வி விருதுகள் வழங்கும் விழா, கட்சி கொடி அறிமுக விழா என்பன உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே நயீம் மூசா தலைமையிலான செக்யூரிட்டி சர்வீஸ் தான் முழு பாதுகாப்பை வழங்கி வருகிறது துபாய் மட்டுமின்றி கத்தார், குவைத், ஓமன், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மூசாவுக்கு செக்யூரிட்டி சர்வீசஸ் பிராஞ்சுகள் உள்ளன. இதில், 22 வகையான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகின்றன. துபாய் மால், கொச்சி லூலு மால், டெல்லி கல்யாண் ஜுவல்லரி உள்ளிட்ட இடங்களிலும் செக்யூரிட்டி சர்வீசஸ் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் மீது 3 வழக்குப்பதிவு.. விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு!