தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ!

Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

29 Dec 2025 06:38 AM

 IST

சென்னை, டிசம்பர் 29: தமிழகத்தில் நாளை (டிசம்பம் 30) முதல் புத்தாண்டு வரை (ஜனவரி 1) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கனமழை கொட்டித்தீர்க்கும். ஆனால், இந்த ஆண்டு பெரியளவு மழை பெய்யவில்லை. மாதத் தொடக்கத்தில் தித்வா புயல் காரணமாக ஓரளவு மழை பெய்தது, அதன் பின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதேசமயம், இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் வழக்கத்தை விட அதிகமாக குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதேசமயம், பகல் நேரங்களில் கடும் வெயில் அடித்து வருகிறது. இந்தநிலையில், வரும் நாட்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இதையும் படிக்க : பணம் பங்கு பிரிப்பதில் தகராறு…பாஜக நிர்வாகி வீடு சூறை. சொந்த கட்சியினர் உள்பட 5 பேர் கைது!

இன்றைய வானிலை நிலவரம்:

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 29) தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலை:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். அத்துடன் மேற்கண்ட நாள்களில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் நாட்களுக்கு மழை தான்:

தொடர்ந்து, வரும் டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 1ம் தேதி அன்று அன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் வரும் ஜனவரி 3ம் தேதி வரை மழை தமிழக பகுதிகளில் மழை தொடரும் என்றும் முன்னறிவித்துள்ளது.

இதையும் படிக்க : மது அருந்தியதை தட்டிக் கேட்ட மனைவி…ஆத்திரமடைந்த கணவன்…விபரீதத்தில் முடிந்த தகராறு!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு