புத்தாண்டு அன்று கனமழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

New Year 2026 : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 1, 2026 புத்தாண்டு அன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்தும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு அன்று கனமழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Published: 

27 Dec 2025 15:44 PM

 IST

சென்னை, டிசம்பர் 27: தமிழகத்தில் 2026 புத்தாண்டு (New Year) நாளான ஜனவரி 1 அன்று, மிதமான மழை (Rain) பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, டிசம்பர் 27, 2025 இன்றும் மற்றும் டிசம்பர் 28, 2025 ஆகிய தேதிகளில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 28, 2025 அன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 30, 2025 அன்று தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிக்க : கோவையில் மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற முயன்று பலியான சிறுமி…மத்திய அரசு அளித்த வெகுமதி!

புத்தாண்டு அன்று மழைக்கு வாய்ப்பா?

அதனைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 31, 2025 அன்று மற்றும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி தென் தமிழகத்தின் பல பகுதிகளில், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் வட மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையைப் பொருத்தவரை, டிசம்பர் 27, 2025 இன்றும் மற்றும் டிசம்பர் 28, 2025 நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இது இருந்தால் தான் படிவம் 6 ஏற்றுக்கொள்ளப்படும்.. புதிய வாக்காளர்கள் சந்திக்கும் சிக்கல்..

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?