கோவையில் மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற முயன்று பலியான சிறுமி…மத்திய அரசு அளித்த வெகுமதி!
Pradhan Mantri Rashtriya Bal Puraskar Award: கோவையில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை துணிச்சலாக காப்பாற்ற முயன்று உயிரிழந்த சிறுமியின் தாயிடம் டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பிராதன் மந்திரி பால் புரஸ்கார் விருதை வழங்கி கெளரவப்படுத்தினார் .
கோயம்புத்தூரை சேர்ந்தவர் அர்ச்சனா சிவராமகிருஷ்ணன். இவரது மகள் வ்யோம பிரியா. இவருக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விருதை பெறுவதற்கு வ்யோம பிரியா இல்லை. அவருகக்கு பதிலாக அவரது தாய் அர்ச்சனா சிவராமகிருஷ்ணன் டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து விருதை பெற்றுக் கொண்டார். வ்யோம பிரியாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதற்கு பின்னால் மிக முக்கிய காரணம் உள்ளது. இது தொடர்பாக அரச்சனா சிவராம கிருஷ்ணன் கூறியதாவது: டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்த சுமார் 20 குழந்தைகள் இந்த விருதை பெற்றனர்.
மத்திய அரசு அளித்த வெகுமதி
எனது மகள் வ்யோம பிரியா உயிரிழந்த நிலையில், இந்த விருதை பெறுவது ஒரு கசப்பான மற்றும் இனிமையான தருணமாக உள்ளது. இந்த நேரத்தில், இந்த விருதை பெறுவதற்கு எனது மகள் வ்யோம பிரியா இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணத்தில் எனது மகள் வ்யோம பிரியா விளையாடிக் கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: பானிபூரி வாங்கி தருவதாக 5 வயது சிறுவன் கடத்தல்.. பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. கோவையில் பரபரப்பு!!




மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்ற முயன்ற சிறுமி
அப்போது, அதே விளையாட்டு பூங்காவில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த எனது மகள் வ்யோம பிரியா அந்தச் சிறுவனைக் காப்பாற்ற முயன்ற போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரியா உயிரிழந்தார். இதே போல, அந்தச் சிறுவனும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு தான் நாங்கள் பூங்காவுக்கு எனது மகளை தேடி சென்றோம்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்-சிறுமி
அப்போது, எனது மகள் வ்யோம பிரியா தலையில் காயம் அடைந்து மயங்கி கிடந்தார். உடனே, அவளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் தான், எனது மகள் வ்யோம பிரியா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
குழந்தைகள் நல அதிகாரிகள் எதிர்ப்பு
குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவில் தரைப் பகுதியில் சென்ற மின் கம்பியில் மின்சாரம் கசிந்து உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு அந்தப் பகுதியில் உள்ள பூங்கா மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால், குழந்தைகள் நல அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த பூங்கா மூடப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சிவகாசி அருகே பயங்கரம்… இரு சிறுமிகளுக்கு எமனாக மாறிய வீட்டின் சுவர்…கதவில் விளையாடியது குற்றமா!