தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு – கடிதத்தை வழங்கினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்!
TVK Vijay : தவெக ஆட்சி அமைக்க விசிக சார்பாக ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வழங்கினார். இதனையடுத்து ஆட்சியமைக்க தேவைப்படும் எம்எல்ஏகளின் ஆதரவு 118 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விஜய் 4வது முறையாக ஆளுநரை சந்திக்கவிருக்கிறார்.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்
சென்னை, மே 9 : நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் தனது கட்சி எம்எல்ஏகளின் சார்பாக ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வழங்கினார். இதனையடுத்து தவெக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரி மீண்டும் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்கவிருக்கிறார்.
தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு
விசிக ஆதரவு அளித்த நிலையில் தவெக ஆட்சியமைக்க தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த கட்சியின் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்கவிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த கடிதத்தில் நிபந்தனையற்ற ஆதரவு என குறிப்பிடப்ட்டுள்ளது. முன்னதாக அமைச்சரவையில் பங்கு, திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை.
இதையும் படிக்க : மே 10-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்?.. என்ன நடக்கும்?
ஆதவ் அர்ஜூனாவிடம் கடிதம் வழங்கிய திருமாவளவன்
Tamil Nadu | VCK president Thol. Thirumavalavan gives the official confirmation letter to Aadhav Arjuna – TVK General Secretary – Election Campaign Management, extending their support to TVK to form a government in the state.
(Pic: TVK) pic.twitter.com/A60i3uJ0f2
— ANI (@ANI) May 9, 2026
இதற்கிடையில் கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் மே 9, 2026 இன்று இரவு கேரளம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தவெகவின் பதவியேற்பு விழா நடக்க மேலும் தாமதமாகும் என கூறப்படுகிற77353.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ எஸ்.காமராஜிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மே 8, 2026 நேற்று நள்ளிரவு ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்தார். மேலும் தவெக எஸ்.காமராஜ் பெயரில் போலி கடிதம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு வழங்கினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தவெக எஸ்.காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : திருமாவளவன் ஏன் தயங்குகிறார்? திமுக முட்டுக்கட்டை போடுகிறது – தமிழிசை பரபரப்பு கருத்து
இந்த நிலையில் குதிரை பேரம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அது குறித்து விசாரிக்காமல் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கமாட்டார் என கூறப்படுகிறது. இதனால் தவெக ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனையடுத்து 4வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்கவிருக்கிறார்.