தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கிய இளம் பெண்.. அத்துமீறிய கள்ளக்காதலன்.. பெற்ற தாயின் வக்கிர செயல்!

Chennai Crime : சென்னை சாலி கிராமத்தில் பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாயின் செயல் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கர்ப்பமான இளம் பெண் அளித்த புகாரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கிய இளம் பெண்.. அத்துமீறிய கள்ளக்காதலன்.. பெற்ற தாயின் வக்கிர செயல்!

சாலிகிராமத்தில் பெற்ற மகளுக்கு தாயின் கள்ளக்காதலன் தொந்தரவு

Updated On: 

23 Feb 2026 08:14 AM

 IST

சென்னை சாலி கிராமம் பகுதியில் செக்யூரிட்டி வேலை செய்து வரும் நபர் தனது மனைவி மற்றும் 20 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர், தனது நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருவதால் வாரத்துக்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வார். இதன் காரணமாக, அவரது மனைவிக்கும், மற்றொரு நபருக்கும் தவறான உறவு ஏற்பட்டது. இதனால், அந்த நபர் அவ்வப்போது இந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதை அறிந்த அந்தப் பெண்ணின் மகள் தனது தாயை கண்டித்ததுடன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது மகளுக்கு தூக்க மாத்திரை வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த சிறுமியும் தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளார். பின்னர் அந்த இளம் பெண் மயங்கினார். அப்போது, அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளக்காதலன்

அதன்படி, வீட்டுக்கு வந்த அந்த நபர் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அவரது மகளையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், கண் விழித்த அந்த இளம் பெண் தன்னை யாரோ பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து தாயிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதேபோல, மற்றொரு நாள் அந்த இளம் பெண்ணுக்கு தாய் தூக்க மாத்திரை அளித்து தூங்க வைத்துள்ளார். அப்போதும், வீட்டுக்கு வந்த அந்த நபர் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அணுகியுள்ளார்.

மேலும் படிக்க: சென்னையில் பெண்ணுக்கு வந்த பார்சலில் பகீர் கிளப்பும் பொருள்.. கடும் அதிர்ச்சி.. அப்படி உள்ளே என்ன இருந்தது!

அறையில் பூட்டி வைக்கப்பட்ட இளம் பெண் தப்பித்தார்

அப்போது, திடீரென எழுந்த இளம் பெண் அருகில் அந்த நபர் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவரது தாய் தனது மகளை மிரட்டி அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. பின்னர், அந்த அறையில் இருந்து தப்பித்த இளம் பெண் திருவண்ணாமலையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று நடந்த விவரத்தை கூறியுள்ளார். அப்போது, வயிறு வலிப்பதாக அந்த இளம் பெண் கூறிய நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

20 வயது இளம் பெண் கர்ப்பம்

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து, அந்த இளம் பெண் சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் பெற்ற மகளை தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பெண் காவல் ஆய்வாளரிடம் ரூ.5.42 கோடி சொத்து… தோண்டி துருவிய லஞ்ச ஒழிப்பு துறை… FIR- இல் அதிர்ச்சி தகவல்கள்!

Related Stories
திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 161 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது.. இது 73 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் குறைவாகும்!
அமமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்..
காங்கிரஸ் கோட்டையாக திகழும் காரைக்குடி.. களமிறங்கும் முடிவில் சீமான்.. வெற்றிக்கு வித்திடுமா அரசியல் வியூகம்!
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. வேலூர் புறப்பட்டார் விஜய்.. சாலை மார்க்கமாக 140 கிமீ பயணம்!
இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்.. நடுக்கடலில் மீன்பிடித்த 12 மீனவர்கள் கைது.. இதற்கு ஒரு END-ஏ கிடையாதா?
முடி மாற்று சிகிச்சையா.. புதிய விதிகளை மறந்துவிடாதீர்கள்.. மீறினால் சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!