கோவை ஈஷாவில் மகாசிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் 33வது மகாசிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மேலும் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

கோவை ஈஷாவில் மகாசிவராத்திரி விழா - சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மகாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ராஜ்நாத் சிங்

Published: 

12 Feb 2026 20:27 PM

 IST

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் 33வது மகாசிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். வருகிற பிப்ரவரி 15, 2026 அன்று மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். சத்குருவின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பக்தி, இசை மற்றும் தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் 140 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வை நேரலையாக 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் 23 மொழிகளில் பார்க்கவுள்ளனர்.

விழாவின் தொடக்கமாக பஞ்சபூத கிரியா என்ற நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என பஞ்ச பூத தத்துவங்கள அடிப்படையாக வைத்து நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து லிங்க பைரவி மகா யாத்திரை எனும் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறவுள்ளது.

மேலும், இசை நிகழ்ச்சிகளில் குஜராத்தி மக்கள் இசை கலைஞர் ஆதித்யா காட்வி, பிரஷாந்த் சோனாக்ரா மற்றும் குழுவின் பாரம்பரிய தபலா நிகழ்ச்சி, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர், ஸ்வரூப் கான், ப்ளேஸ், பரடாக்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். மகாசிவராத்திரிக்கு முன்னோட்டமாக நடைபெறும் யக்ஷா இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன விழாவில் கர்நாடக இசைக் கலைஞர் சிக்கில் குருசரண் பிப்ரவரி 12, 2026 அன்று பங்கேற்கிறார். மேலும் பிப்ரவரி 13, 2026 அன்று இந்துஸ்தானி கலைஞர் ராகுல் தேஷ்பாண்டேவும், பிப்ரவரி 14, 2026 அன்று பாரதநாட்டிய நடனக் கலைஞர் மீனாட்சி ஸ்ரீனிவாசனும் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டின் மகாசிவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக, சத்குரு நேரடியாக யோகேஸ்வர லிங்க மகா அபிஷேகம் செய்யவுள்ளார். மேலும், 112 அடி உயர ஆதியோகி சிலையை மையமாகக் கொண்டு நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற ஒளி, ஒலி நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 3.40 மணிக்கு பிரம்ம முகூர்த்த தியானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மகாசிவராத்திரி ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்ற சக்தி அதிகரிக்கும் நாளாகக் கருதப்படுகிறது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், 11 டிகிரி அகலங்கில் அமைந்துள்ளதால் இயற்கை சக்தி அதிகரிக்கும் என சத்குரு விளக்குகிறார். இவ்விழா, ஆன்மிகத்தையும், பொது வாழ்வையும் ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பங்கேற்பால் இவ்வாண்டு நிகழ்வு மேலும் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்