கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி.. “விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி”.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!
வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றாகத் திகழும் கீழடி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த அகழாய்வு நடைபெறவுள்ளது. அதன்பிட, மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு, சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஏற்கனவே பல கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை, மார்ச் 17: தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், தமிழர்களின் நாகரிகத் தொன்மையையும் வெளிக்கொணரும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு (TNSDA) அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”.. ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சுக்கு ரஜினிகாந்த் பதிலடி..
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்:
Relentless pressure. Repeated letters. And finally, approval.
After months of delay, the Union Government has cleared archaeological excavations at 8 sites including #Keeladi. This is a win earned through DMK’s persistent efforts.
But we are not done. The Union BJP Government… pic.twitter.com/EPHaACCCGR
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 17, 2026
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பாஜக அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் #கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான எட்டு இடங்கள்:
வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றாகத் திகழும் கீழடி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த அகழாய்வு நடைபெறவுள்ளது. அதன்பிட, மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு, சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஏற்கனவே பல கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சோழர் கால துறைமுகத்தில் இங்குள்ள பண்டைய பௌத்த விகாரை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. கடலூர் மாவட்டம் மணிக்கொல்லையில் சங்க கால கண்ணாடி மணிகள் தயாரிக்கும் மையம் குறித்து இங்கு ஆய்வு நடத்தப்படும். கோவை வெள்ளலூரில், ரோம் நாட்டு தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இந்த இடத்தில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் ரோமானியத் தொடர்புகள் குறித்த தேடல் இங்கு தொடரும். தெலுங்கனூர் மேட்டூர் அணைப் பகுதியில் இரும்பு காலத்தைச் சேர்ந்த பழமையான இரும்பு வாள்கள் கண்டெடுக்கப்பட்ட இடம். ஆதிச்சநல்லூரில் திருக்கோவிலூர் அருகே கால ஈமக்காடுகள் குறித்த ஆய்வு. கொந்தகை மற்றும் பிற இடங்கள் கீழடியின் வாழ்விடப் பகுதிகளை ஒட்டியுள்ள இதர தளங்கள்.
ஆய்வின் முக்கியத்துவம்:
கீழடி அகழாய்வு ஏற்கனவே தமிழர்களின் நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதையும், வைகை நதிக்கரையில் ஒரு செழுமையான நகர நாகரிகம் இருந்ததையும் உறுதி செய்துள்ளது. தற்போது அனுமதி கிடைத்துள்ள இடங்கள் மூலம், தமிழர்களின் கடல் கடந்த வணிகம், தொழில்நுட்ப அறிவு (இரும்பு மற்றும் கண்ணாடி மணிகள் தயாரிப்பு) மற்றும் அக்கால மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கூட்டணி இழுபறி.. தேர்தல் அறிக்கையுடன், வேட்பாளர் பட்டியல்?.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
குறிப்பாக, மேட்டூர் அணைப் பகுதியான தெலுங்கனூரில் கண்டெடுக்கப்பட்ட எஃகு வாள்கள் கி.மு. 1200 – 1400 காலத்தைச் சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளதால், உலகிலேயே மிகப்பழமையான இரும்புத் தொழில் நுட்பம் தமிழகத்தில் இருந்ததா என்ற கோணத்தில் இந்த ஆய்வுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அனுமதியைத் தொடர்ந்து, தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் இந்த எட்டு இடங்களிலும் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.