உதயநிதி, கமல், விஜய் வீடுகள் கட்டுமானத்தில் விதிமீறல்கள் உள்ளனவா? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!
ECR Illegally Construction: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் சென்ன உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில், அரசியல் தலைவர்களான உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் வீடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஈசிஆரில் அரசியல் தலைவர்களின் வீடுகள் கட்டுமானத்தில் விதிமீறலா
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பகுதி முதல் உத்தண்டி பகுதி வரையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கும் முரணாக கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பங்களாக்கள் மற்றும் ரிசார்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2018- ஆம் ஆண்டு 798 கட்டட உரிமையாளர்களுக்கு எதிராக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, இந்த கட்டிடங்களை அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வருகிற மே மாதத்துக்குள் விசாரணை மேற்கொண்டு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அரசியல் தலைவர்கள் வீடுகள்-பங்களாக்கள்
சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் பங்களாக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த், எம். கதிர்க்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மாநகராட்சி பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து 798 உரிமையாளர்களில் 440 பேர் அரசிடம் மேல்முறையீடு செய்திருந்தனர்.
மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!
மே 31- ஆம் தேதிக்குள் முடிவெடுக்க உத்தரவு
இதில், 84 மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. மீதமுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள், மீதமுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து கட்டட உரிமையாளர்கள் தரப்பு விளக்கம் அளிப்பதற்காக மார்ச் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கினர். பின்னர், விசாரணை மேற்கொண்டு வரும் மே 31- ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கம்
இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை நீண்ட கடற்கரையில் அரிய வகை ஆமைகள் இனப் பெருக்கம் செய்வதால் இந்த பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது முக்கியமாகும். எனவே, உத்தண்டிக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்