திருமணத்தை மீறிய உறவால் சர்ச்சை…. தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

TVK Vijay : தவெகவின் மகளிர் அணி நிர்வாகியின் திருமணத்தை மீறி உறவில் இருந்ததாக சர்ச்சையான நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை தமிழக வெற்றிக் கழகம் பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணத்தை மீறிய உறவால் சர்ச்சை.... தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் நீக்கம்

Updated On: 

20 Dec 2025 19:36 PM

 IST

நாமக்கல், டிசம்பர் 20: தவெகவின் (TVK) மகளிர் அணி நிர்வாகியின் திருமணத்தை மீறி உறவில் இருந்ததாக சர்ச்சையான நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை தமிழக வெற்றிக் கழகம் பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவரை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் தவெக கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருமணத்தை மீறிய உறவால் சிக்கிக்கொண்ட தவெக நிர்வாகி

நாமக்கல்லை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.  நாமக்கல் மாவட்டத்தில் கட்சியின் முகமாக தன்னைக் காட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!

இந்த நிலையில் அவர் நாமக்கல் மாவட்ட தவெக மகளிரணி நிர்வாகி வீட்டிற்கு நள்ளிரவில் சென்றதாகவும், இதனை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழை்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விசாரணையில் செந்தில்நாதன் அப்பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்நாதனை அப்பெண்ணின் உறவினர்கள் அடுத்த நாள் காலை வரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தவெகவினரிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில் இது தொடர்பாக கட்சி தலைமைக்கு செந்தில்நாதனின் நடவடிக்கைகள் குறித்து புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புகார் அவரை கட்சியின் மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளார். இந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : விஜய் குறித்த கேள்வி…டென்ஷனான சீமான்…அடுத்து நடந்தது என்ன!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ல நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வருகிற டிசம்பர் 30, 2025 அன்று சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் அக்ட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுடன் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்