தமிழக மக்களை எந்த சக்தியாலும் பிளவு படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!
Tamil Nadu People Cannot Be Divided : திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவற்றை வைத்து, தமிழக மக்களை எந்த மதவாத சக்திகளாலும் பிளவு படுத்த முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு தெரிவித்தார் .
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் பணிகளில் தொடக்கத்திலிருந்து சிறு சிறு பிரச்சனைகளை கலைய வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதில், வாக்களிக்கும் உரிமை உடைய எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக்கூடாது. வாக்களிக்கும் தகுதி பெறாத எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதற்காகவே, எஸ் ஐ ஆர் பணிகளுக்கு முன்பாக தொகுதி வாரியாக பில்ஓக்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் நியமித்தார். இதற்காக அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு களத்திற்கு சென்று ஒரு வாக்காளர் கூட விடுபடாத வகையில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜனவரி 9- ஆம் தேதிக்குள் விடுபட்ட அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்.
பாஜகவுக்கு தமிழக மக்கள் ஏமாற்றம் அளிப்பர்
கடந்த அதிமுக ஆட்சியில் இதே வாக்காளர் பட்டியலை வைத்து தான் ஆட்சிக்கு வந்தனர். அப்படியென்றால் போலியான வாக்காளர்கள் திமுக சார்பில் இருந்திருந்தால் அதிமுக எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் வெளியிடும் கருத்துகளை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். தமிழிசை சௌந்தர ராஜனுக்கு பாஜக ஏமாற்றத்தை தந்து கொண்டிருக்கிறது. இதே போல, ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு தமிழக மக்கள் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க: வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இப்படி மீண்டும் விண்ணப்பிக்கலாம்!!




நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் தாமதம்
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஏமாறப் போகிறது. அந்த ஏமாற்றத்தை தமிழக மக்கள் நிச்சயம் அளிப்பார்கள். நீதியின் உத்தரவுக்கு அடிபணிந்து, சட்டத்தின் வழியில் ஆட்சி நடைபெறுகிறது என்றால் அது திமுக ஆட்சி தான். 40 முதல் 50 ஆண்டுகள் குடியிருப்பவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கிட்டு, நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால் தான், சில நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்த தாமதம் ஏற்படுகிறதே தவிர மறுக்கப்படுவது இல்லை.
தமிழக மக்களை பிளவு படுத்த முடியாது
உறுதியாக நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்று, மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் உத்தரவுகள் செயல்படுத்தப்படும். பாஜக திட்டமிட்டு மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறது. திமுக ஆட்சி இருக்கும் வரை பாஜகவின் கனவு பலிக்காது. தமிழக மக்களை இனம், மதம், ஜாதியால் பிளவுபடுத்த எந்த சக்தி ஊடுருவினாலும் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பீகார், குஜராத்தை விட தமிழகத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கம்.. ஷாக் தகவல்!!