சட்டமன்ற தேர்தல்… திமுகவுக்கு தண்ணி காட்ட பலே திட்டம்… விஜய் எடுக்கும் புதிய பார்முலா..!

Vijay Contest Constituencies: வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளுக்கு தண்ணி காட்டும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதிய ரூட்டை எடுத்துள்ளார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல்... திமுகவுக்கு தண்ணி காட்ட பலே திட்டம்... விஜய் எடுக்கும் புதிய பார்முலா..!

மேலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்குப் பிறகு பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,22792 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 1,7,995 பேரும், பெண் வாக்காளர்கள் 1,14,726 பேரும், 3- ஆம் பாலினத்தவர்கள் 71 பேரும் உள்ளனர். அதன் அடிப்படையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பெண்கள் வாக்குகள் அதிகளவு உள்ளது. அதன் அடிப்படையிலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இந்த தொகுதியில் களமிறங்கினால் வெற்றி அடைந்து விடலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published: 

13 Mar 2026 18:35 PM

 IST

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக தமிழக வெற்றிக் கழகம் இருந்து வருகிறது. இந்த கட்சியானது முதல் முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் வியூகங்களை அந்த கட்சியின் தலைவர் விஜய் மற்றும் கட்சியினர் அமைத்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே, விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரலாம் என்றும், அப்படி கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் அந்த கட்சியின் தலைவர் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார். தற்போதைய சூழ்நிலையில், அந்த கட்சியில் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வரவில்லை. இப்படியாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் நேர்காணலை தொடங்கி நடத்தி வருகிறது.

இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட முடிவு

இதில், முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டணி ஏற்படதா நிலையில் தனித்துப் போட்டியிட்டால் 2 தொகுதிகளில் களமிறங்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தரப்பினர் விஜய் போட்டியிடும் தொகுதியில் வலுவான வேட்பாளரை களம் இறங்குவார்கள் என்று அந்த கட்சியினர் எண்ணுகின்றனர்.

மேலும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?

திமுகவுக்கு தண்ணீர் காட்டுவதற்கு பலே திட்டம்

இதனால், ஒரு தொகுதி இல்லையேனும், மற்றொரு தொகுதியில் விஜய் வெற்றி பெற்று விடுவார் என்ற எண்ணம் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த இரு தொகுதிகளிலும் சிறுபான்மையினர்களான கிறிஸ்தவர்களின் வாக்கு அதிகம் என்பதால் அது தனது வெற்றிக்கு உதவும் என்று விஜய் நம்புவதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் விஜய் எடுக்கும் புது ரூட்

மொத்தத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து தேர்தலில் சந்திப்பதா என்பதை விஜய் இன்னும் முடிவு செய்யாமல் இரட்டை நிலைபாட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. அதை வேளையில் தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டால் 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட முடிவு செய்திருப்பது அரசியலில் புது ரூட்டாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்று அந்தக் கூட்டணியின் தலைமை தீவிரமாக முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கட்சி பெயரில் வந்த எம்ஜிஆர்.. தென்னந்தோப்பு சின்னம்.. புது கட்சி குறித்து விவரம் சொன்ன சசிகலா!

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..