விஜய் பங்கேற்கும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – யாருக்கு அனுமதி? கட்சித்த தலைமை அறிவிப்பு

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வருகிற டிசம்பர் 22, அன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.  விஜய் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

விஜய் பங்கேற்கும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா -  யாருக்கு அனுமதி?  கட்சித்த தலைமை அறிவிப்பு

விஜய்

Updated On: 

21 Dec 2025 15:02 PM

 IST

சென்னை, டிசம்பர் 21: உலகம் முழுவதும் வருகிற டிசம்பர் 25, 2025 அன்று கிறிஸ்துவர்களால் கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகை கொண்டாப்படவிருக்கிறது. அதற்கு இன்னும் ஒரு சில நாட்களை உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் சமந்துவ கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் டிசம்பர் 20, 2025 அன்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் தவெக சார்பில் விஜய் (Vijay) பங்கேற்கும் கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 22, 2025 அன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வருகிற டிசம்பர் 22, 2025 அன்று மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்டஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் டிசம்பர், 2025 நாளை அன்று நடைபெறவிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி சீ்ட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களும் திமுக வாக்குகளே” பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்

பொதுவாக விஜய் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவரைக் காண தொண்டர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், அசாம்பாவிதங்களைத் தவிர்க்க குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே கியூஆர் கோடு மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. பாண்டிச்சேரியில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் தொண்டர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்புகள் கடுமயாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக சார்பில் வெளியான அறிவிப்பு

 

இதையும் படிக்க : ஜென் Z தலைமுறை இதனை தெரிந்துகொள்ள வேண்டும்…. – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

வரவிருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தீவிரமாக கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன்,நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் தவெகவில் இணைந்தனர். குறிப்பாக செங்கோட்டையனின் வருகை கொங்கு மண்டலத்தில் தவெகவிற்கு மேலும் வலுசேர்க்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஈரோட்டில் தவெகவின் பிரச்சாரம் செங்கோட்டையனின் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அடுத்ததாக வருகிற டிசம்பர் 30, 2025 அன்று பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்