Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தொண்டர்கள் – திருப்பூர் அருகே பரபரப்பு

TVK Vijay : ஈரோட்டில் பரப்புரையை முடித்துக்கொண்டு கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி விஜய் சென்றபோது அவரது வாகனத்தை தவெக தொண்டர்கள் ஆபத்தான முறையில் பின்தொடர்ந்து சென்றனர்.  இந்த நிலையில் அவரது வாகனம் திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தொண்டர்களின் பைக்குள் நிலைதடுமாறி கீழே விழுந்தன.

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய தொண்டர்கள் – திருப்பூர் அருகே பரபரப்பு
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Dec 2025 15:47 PM IST

திருப்பூர், டிசம்பர் 18: ஈரோட்டில் (Erode) பரப்புரையை முடித்துக்கொண்டு கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி விஜய் (Vijay) சென்றபோது அவரது வாகனத்தை தவெக தொண்டர்கள் ஆபத்தான முறையலி் பின்தொடர்ந்து சென்றனர்.  இந்த நிலையில் அவரது வாகனம் திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தொண்டர்களின் பைக்குள் நிலைதடுமாறி கீழே விழுந்தன. அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது அடுத்தடுத்த வாகனங்கள் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘திமுக தீய சக்தி’

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் விஜய் டிசம்பர் 18, 2025 அன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது திமுக தீய சக்தி எனவும், தவெக தூய சக்தி எனவும் பேசினார்.  மேலும் பேசிய அவர், களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும். களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்க முடியாது. நீங்க கேட்குறீங்களேணுலாம் எதிர்க்க முடியாது பாஸு என்றார்.

இதையும் படிக்க : தவெக தலைவர் விஜய்க்காக ஐஆர்எஸ் பதவியை தூக்கி எறிந்தேன்…அருண்ராஜ்!

விஜய் பகிர்ந்த செல்ஃபி வீடியோ

 

அதனைத் தொடர்ந்து மேலும் பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது கட்சிக்கு மிகப் பெரிய பலம். அவரைப் போல இன்னும் நிறைய பேர் தவெகவில் வந்து சேர இருக்கிறார்கள், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றார். கடந்த சில நாட்களாக விஜய் முன்னிலையில் மேலும் முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவதாக கூறப்படும் நிலையில்,  அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 தொண்டர்கள்

ஈரோட்டில் நடைபெற்ற தவெக பரப்புரையில் தவெக தொண்டர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மற்றொரு பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.  ஈரோடு தவெக கூட்டத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு, மயக்கம், உடல் சோர்வு உபாதைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க : “தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!

கரூரில் தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிசம்பர் 18, 2025 அன்று ஈரோட்டில் குழந்தைகளுக்கும், கர்ப்பினி பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் இதுபோன்ற தொண்டர்களில் பொறுப்பற்ற செயல்களால் ஏற்படும் விபத்துகள் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.