ஜென் Z தலைமுறை இதனை தெரிந்துகொள்ள வேண்டும்…. – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
Tamil Nadu Heritage: திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பெருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 18, 2025 அன்று திறந்து வைக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர் தமிழர்களின் பெருமைகளை ஜென் Z தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
திருநெல்வேலி, டிசம்பர் 20: பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin)இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தாத்துக்குடி ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணியின்போது போது கண்டறியப்பட்ட பொருட்களை வைக்க திருநெல்வேலியில் (Tirunelveli) பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டபமாக உருவாகியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 21, 22025 நாளை திறந்து வைக்க உள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொருநை அருங்காட்சியகம் குறித்து பேசிய முதல்வர்
இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிக்க : திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ
அனைவரும் வருக… பெருமிதம் கொள்க!#PorunaiMuseum pic.twitter.com/21RuY8KmGF
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 20, 2025
இது தொடர்பாக காணொலி வாயிலாக பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை கீழடி அருங்காட்சியகத்திற்கு அடுத்து நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறோம். பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தில் இரும்பு, தொடக்க வரலாற்று காலம் என தடயங்கள் கிடைத்துள்ளன. நாம் வந்த பாதையை தெரிந்து கொண்டு முற்போக்காக, பரந்த மனப்பான்மையுடன் வளர்வதற்கான தேடல் இது. இது தற்பெருமை, மேடை அலங்காரத்திற்காக பேசிய வெற்றுப் பேச்சு அல்ல. அறிவியல்பூர்வமான உண்மை. சங்ககால துறைமுக நகரமானகொற்கை பற்றி சங்க இலக்கியங்களில் முழுமையாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : தமிழக மக்களை எந்த சக்தியாலும் பிளவு படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!
‘தமிழரின் நாகரிகத்தை ஜென் Z தலைமறைக்கும் எடுத்து செல்ல வேண்டும்’
ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வில் வெண்கலம், செம்பு தொல்பொருட்கள் வெளிக்கொண்டுவரப்பட்டன. இரும்பை உருக்கி கருவிகளை செய்யும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கீழடி நம் தாய்மடி. பொருநை தமிழரின் பெருமை என உரக்கச் சொல்வோம், இங்கு 55,000 சதுர அடியில் அதி நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் தொன்மை, நாகரிகத்தை ஜென் Z தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் டிசம்பர் 20, 2025 அன்று மாலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிறிஸ்தவ நல்லெண்ணக் குழு சார்பில் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



