YEAR ENDER 2025: மனதில் நீங்கா ரணமாக மாறிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!

Tvk Leader Vijay Campaign Rally Stampede In Karur: கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அனைவரது மனதிலும் நீங்கா ரணமாக பதிந்துள்ளது.

YEAR ENDER 2025: மனதில் நீங்கா ரணமாக மாறிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்

Updated On: 

30 Dec 2025 18:04 PM

 IST

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரை பயணத்தை உற்சாகமாக தொடங்கியிருந்தார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தனது பரப்புரை பயணத்தை வெற்றிகரமாக முடித்த அவர், கரூரிலும் தனது பரப்புரை பயணத்தை வெற்றிகரமாக முடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் வந்திருந்தார். ஆனால், அவர் பரப்புரை மேற்கொண்ட நாளான (செப்டம்பர் 27 ) சனிக்கிழமை விஜய்க்கும், அவரை பார்ப்பதற்காக கூடியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் கருப்பு சனியாக மாறும் என்பது தெரியாமல் போனது. இந்த கொடூரமான சம்பவத்தை தமிழக மக்கள்… ஏன் உலகமே அவ்வளவு எளிதில் கடந்து போகவும் முடியாது… மறந்து போகவும் முடியாது… ஏனென்றால் 24 மணி நேரத்துக்குள் இரு வயது குழந்தை உள்பட 41 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தான் காரணம்.

கரூர் கொடூரம் ஈடு செய்ய முடியாதது

கரூரில் விஜய் குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்தால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும், காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும் பல்வேறு யோசனைகளை முன் வைத்தாலும் காலம் கடந்த பிறகு பேசி என்ன பயன் என்பது போல ஆகிவிட்டது. இவ்வளவு கொடூரமான சம்பவத்துக்கும், உயிர் இழப்புக்கும் அவ்வளவு எளிதாக ஈடு செய்ய முடியாது.

மேலும் படிக்க: தவெகவின் கூட்டணி கணக்கு…4 கட்சிகளுக்கு குறி…விஜய் அமைக்கும் வியூகம்!

நீங்கா ரணமாக பதிந்த சம்பவம்

இந்த சம்பவத்தில் கொடூரத்தின் உச்சமாக 2 வயதே ஆன பச்சிளம் குழந்தை, திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம் ஜோடி, ஒரே வயிற்றில் பிறந்த இரு இளம் பெண்கள் ஆகியோர் பலியானது அனைவரது மனதிலும் நீங்கா ரணமாக பதிந்து போனது. கூட்டத்துக்கு வயதானவர், கர்ப்பிணிகள், குழந்தைகள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியும் அதை மீறி குழந்தையை அழைத்து வந்தது மிகப் பெரிய தவறாக அமைந்தது.

கரூர் சம்பவத்தில் கொடூரத்தின் உச்சம்

இதே போல, கரூரில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை பார்ப்பதற்காகவும், தனது திரைப்பட ஹீரோவான விஜய்யை பார்ப்பதற்காகவும் ஆவலுடன் வந்த இளம் பெண்ணும், அவரது வருங்கால கணவரும் கூட்டத்துக்குள் சிக்கி கால்களால் மிதிபட்டு ஒரே இடத்தில் இருவரும் கைகளை கோர்த்தவாறு உயிரிழந்தது கொடூரத்தின் அடுத்த உச்சமாகும்.

பிறப்பிலும், இறப்பிலும் இணைபிரியாத சகோதரிகள்

இதேபோல, ஒரே தாயின் வயிற்றில் அடுத்தடுத்து பிறந்து வளர்ந்த இரு இளம் பெண்கள், பிறப்பிலும் ஒன்றாகவே பிறந்தோம், இறக்கும் போதும் ஒன்றாகவே இறப்போம் என்பது போல அக்காவும், தங்கையும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததும் மிகுந்த வருத்தத்துக்குரியதாக அமைந்தது. ஒரே கிராமத்தை சேர்ந்த நான்கு பேரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறாக அந்த கருப்பு சனிக்கிழமை 41 பேரின் உயிரை காவு வாங்கியது. இன்னும் எத்தனை… எத்தனை… கோடி சனிக்கிழமை வந்தாலும் அந்த கருப்பு சனிக்கிழமை மாறாது…மறையாது…

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு…சிபிஐ விசாரணை வளையத்தில் வருகிறாரா விஜய்!

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு