தவெக அலுவலகம் முன்பு அஜிதா உண்ணாவிரதம் – பின் வாசல் வழியாக வெளியேறிய ஆனந்த் – பரபரப்பு சம்பவம்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி அஜிதா தனது ஆதரவாளர்களுடன் தவெக தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரைத் தவிர்க்கும் பொருட்டு தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் பின் வாசல் வழியாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்வாசல் வழியாக வெளியேறிய ஆனந்த்
சென்னை, டிசம்பர் 23: தன்னை தவெக மாவட்ட செயலாளராக நியமிக்காததையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை தவெக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த விஜய்யின் (Vijay) காரை முற்றுகையிட்டு தனது கோரிக்கையை தெரிவிக்க முயன்றார். அப்போது அவரை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். பின்பு நிர்மல் குமார் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்தையில் சாதகமான முடிவு எட்டப்படாத நிலையில் அஜிதா தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரைத் தவிர்க்கும் பொருட்டு தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் பின் வாசல் வழியாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பின்வாசல் வழியாக வெளியேறியதால் பரபரப்பு
தவெகவில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காததைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா என்பவர் தவெக தலைமை அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகியான அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அந்த தொகுதியில் செல்வாக்கு இல்லாத ஒருவருக்கு பதவி வழங்குவது நியாயமில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பியூஷ் கோயல்.. 50 இடங்களை கேட்க திட்டம்..
இந்த நிலையில் அந்த நேரம் அங்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் காரை முற்றுகையிட்டு, தனது கோரிக்கையை தெரிவிக்க முயற்சி செய்தார். அவரை பாதுகாவலர்கள் உடனடியாக அப்புறப்படுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தவெக அவலுலகம் முன் அஜிதா கண்ணீருடன் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
நிர்மல் குமார் விளக்கம்
இந்த நிலையில் அவருடன் பாஜக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் அஜிதா சமாதனமடையவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அஜிதா தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அஜிதாவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், கட்சிக்காக உழைத்த யாரையும் எங்கள் தலைவர் கைவிட மாட்டார். அவர்களுக்கு உரிய பொறுப்புகளை தலைவர் வழங்குவார்.
இதையும் படிக்க : சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..
கடந்த வாரம் அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க முடியவில்லை என எம்எல்ஏ ஒருவர் தனது ஐடி கார்டை கிழித்துவிட்டு சென்றார். கட்சியில் நிர்வாகிகளின் நியமனத்தில் ஒரு சிலருக்கு மன வருத்தம் இருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும் என்றார். இந்த நிலையில் அஜிதா தவெக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரை தவிர்க்கும் விதமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பின்வாசல் வழியாக வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.