TVK Vijay Speech: சொல்ல முடியாத அளவுக்கு வேதனை.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!

TVK General Body Meeting: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று அதாவது 2025 நவம்பர் 5ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கரூர் பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தபிறகு, தவெக கட்சி தலைவர் விஜய் பொதுவெளியில் முதல்முறையாக பேசினார்.

TVK Vijay Speech: சொல்ல முடியாத அளவுக்கு வேதனை.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

05 Nov 2025 15:04 PM

 IST

சென்னை, நவம்பர் 5: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று அதாவது 2025 நவம்பர் 5ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கரூர் பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Karur Stampede) 41 பேர் உயிரிழந்தபிறகு, தவெக கட்சி தலைவர் விஜய் (TVK Vijay) பொதுவெளியில் முதல்முறையாக பேசினார். அப்போது அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும், தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இருந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் சொந்தங்களில் மனதிற்கு ஏற்ப இருக்க வேண்டியது நமது கடமை. அதனால்தான், அவர்களுடன் சேர்ந்து அமைதிகாத்து வந்தோம். இப்படி அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் இப்படி நம்மை பற்றி பரப்பப்பட்டன. இதையெல்லாம், சத்தியம் மற்றும் சட்டத்தின் வழியில் துடைத்து எறியப்போகிறோம்.” என்றார்.

ALSO READ: “முதலமைச்சர் வேட்பாளர் விஜய்” தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!!

திமுகவிற்கு எதிராக கடும் விமர்சனம்:

தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “உண்மை நிலையை தெளிவுபடுத்தத்தான் என்று ஏதோ சட்டரீதியாக, சத்தியத்திற்காக நடந்ததாக சாமர்த்தியமாக பேசுவதாக பேசி இருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய், சப்பை கட்டு என்று நான் சொல்லவில்லை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும். நியாயமான விசாரணை மூலமே இந்த சந்தேகத்தை மீட்டெடுத்தாக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதலமைச்சர் மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை எனக்கூறி வன்ம அரசியல் செய்கிறார்கள். அரசியல் காழ்ப்புடன், நேர்மை இல்லாமல் குறுகிய மனதுடன் வடிகட்டிய பொய்யை சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசினார்.

இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் இல்லாத அதிக கட்டுப்பாடு நமது தவெக கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பிரச்சார நேரத்தின்போது பரப்புரை வாகனத்திற்க்குள் மட்டும்தான் இருக்க வேண்டும் ,மக்களை பார்த்து கையசைக்க கூடாது, பேருந்து மேலே ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இப்படியாக அரசியல் காழ்புணர்ச்சியுடன் நேர்மை திறனற்று நம்மை பற்றி பலரும் குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட தமிழக முதலமைச்சருக்கு ஒரு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

பொய் மூட்டைகளையும் , அவதூறுகளையும் அவிழ்த்து விட்டு, கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களுக்கும், கபட நாடக திமுக அரசின் தில்லுமுல்லுகளை தாக்கு பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் நின்றதை மக்கள் அறியாமலா இருப்பார்கள்.

ALSO READ: “தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்” மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ்!!

கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த தனிநபர் ஆணையத்தையே அவமதிப்பது போல், அரசு உயர் அதிகாரிகள் காவல் துறை உயர் அதிகாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பு இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது என்று ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள் என இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மறந்துவிட்டாரா?

இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு கட்சிக்கு தான் போட்டியே ஒன்று தவெக இன்னெற்று திமுக. இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. நூறு சதவீதம் வெற்றி நமக்கே வாகை சூடுவோம் வரலாறு படைப்போம் நம்பிக்கையுடன் இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.” என்று தெரிவித்தார்.