‘எங்களுக்குள் பங்காளி சண்டைதான்’.. மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் அமமுக.. டிடிவி தினகரன் பேச்சு!

TTV Dinakaran To Join NDA Alliance: மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைகிறோம். விட்டு கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை தான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

எங்களுக்குள் பங்காளி சண்டைதான்’..  மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் அமமுக.. டிடிவி தினகரன் பேச்சு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

21 Jan 2026 11:22 AM

 IST

சென்னை, ஜனவரி 21, 2026: மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைகிறோம். விட்டு கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை தான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு, பல்வேறு கூட்டணி கட்சிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயம் தமிழகம் வருகை தந்துள்ளார். நேற்று இரவு முதல் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று ஒரு மணி நேரத்திற்குள் கூட்டணி தொடர்பான முடிவை உறுதி செய்யும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்:

ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி சென்டர் ஆலோசனை நடத்திய சூழலில் இன்றைய தினம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்நிலையில், இந்தச் சூழலில், டிடிவி தினகரன் இன்று காலை 9 மணியளவில் தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு நல்லாட்சிக்கான ஒரு தொடக்கத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்பதற்காக, மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிக்கு உறுதுணையாக இருக்க, எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக நாங்கள் புறப்பட்டுள்ளோம்.

‘விட்டுக் கொடுப்பவர்கள் என்றைக்கும் கெட்டுப் போனதில்லை. எங்களுக்குள் பங்காளி சண்டைதான். இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்’ என பொதுக் குழுவில் நான் கூறியுள்ளேன். பழையவற்றையே நினைத்து, கட்சி நலனையும் தமிழ்நாட்டு நலனையும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்பதற்காக, பொதுநோக்கத்துடன் நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம். அதனால் கெட்டுப் போவதில்லை.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில், ஓரணியில் திரண்டு, மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை—மக்கள் ஆட்சியை—தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

தே.ஜ கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த காரணம்:

இதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர் பதிவு செய்தார். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அந்தக் கூட்டணியில் தான் இடம் பெற மாட்டேன் என்ற நிலைப்பாட்டையும் டிடிவி தினகரன் தெளிவாகத் தெரிவித்தார். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி விலகிய நிலையில், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு டிடிவி தினகரன் மீண்டும் இணைந்துள்ளார்.

பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
ரயில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?
இந்தியாவில் அறிமுகமாகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - இதில் என்ன சிறப்புகள்?