பொதுமக்கள் கவணத்திற்கு.. திருச்சி – காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

Trichy-Karaikal Train Service Changes | திருச்சி - காரைக்கால் இடையே ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

பொதுமக்கள் கவணத்திற்கு.. திருச்சி - காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Jun 2025 08:29 AM

 IST

திருச்சி, ஜுன் 23 : திருச்சி – காரைக்கால் (Trichy – Karaikal) இடையே டெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் (Divisional Railway Administration) தலவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி – காரைக்கால் இடையே என்ன என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களுக்கு பிரதான போக்குவரத்து சேவையாக இருக்கும் ரயில்கள்

இந்தியாவை பொறுத்த வரை பெரும்பாலான பொதுமக்கள் ரயில் போக்குவரத்து சேவையை நம்பி உள்ளனர். குறைவான கட்டணத்தில் விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிலர் பணிக்கு செல்ல ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்க ரயில் போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி – காரைக்கால் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி – காரைக்கால் இடையே ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் படி நடைபெறுவதால் திருச்சி – காரைக்கால் டெமோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மற்றும் காரைக்கால் இடையே டெமு ரயில் இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

காரைக்கால் – திருச்சி டெமு ரயில் இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் காரைக்கால் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும். காரைக்கால் – தஞ்சை பயணிகள் ரயில் இன்று (ஜூன் 23, 2025) மற்றும் 2025, ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் பகல் ஒரு மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 30 நிமிடம் தாமதமாக தஞ்சை வந்து அடையும்.

மேற்குறிப்பிட்ட இந்த ரயில் சேவை மாற்றங்கள் குறித்த தகவல்கள் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
சிறுமி பாலியல் வழக்கு.. குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை.. 9 ஆண்டுகளுக்கு பின் நீதி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!
இரவில் நண்பர்களுடன் மது விருந்து.. காலையில் ரத்த வெள்ளத்தில் கொலை.. காஞ்சிபுரத்தில் நடுங்க வைக்கும் சம்பவம்!
வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!
2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!
தென்காசி போலீஸ் விசாரணைக்கு அதிருப்தி? ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்