பயணிகளே முக்கிய ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

Tamil Nadu Train Changes: திருவாரூர்-கீழ்வேளூர் பகுதியில் பராமரிப்பு பணியால், 2025 ஜூலை 9 முதல் 14 வரை காரைக்கால்–திருச்சி ரயில்கள் திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் கோவை–நாகர்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே ஓடும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளே முக்கிய ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

பயணிகள் ரயில்கள் ரத்து

Published: 

04 Jul 2025 08:02 AM

 IST

தமிழ்நாடு ஜூலை 04: 2025 ஜூலை 2 முதல் 7 மற்றும் 9 முதல் 14 வரை, காரைக்கால்–திருச்சி பயணிகள் ரயில்கள் (Karaikal-Trichy passenger train), காரைக்கால்–திருவாரூர் இடையே ரத்து (Cancellation between Karaikal-Tiruvarur) செய்யப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் காரணமாக (Due to maintenance work) இம்மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில், திருச்சி–திருவாரூர் மற்றும் திருவாரூர்–திருச்சி இடையே ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயங்கும். அதேபோல், கோவை–நாகர்கோவில் விரைவு ரயில் 2025 ஜூலை 3 முதல் 31 வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்–நாகர்கோவில் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, முன்பதிவில்லா சிறப்பு ரயில் தினமும் (ஞாயிறு, புதன்கள் தவிர) திண்டுக்கலிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே (Southern Railway) தெரிவித்துள்ளது.

காரைக்கால்–திருச்சி பயணிகள் ரயில்கள் ரத்து

திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர்-கீழ்வேளூர் ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக, காரைக்கால்–திருச்சி பயணிகள் ரயில்கள் 2025 ஜூலை 2 முதல் 7 வரை காரைக்கால்–திருவாரூர் இடையே ரத்து செய்யப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடையாததால், மீண்டும் 2025 ஜூலை 9 முதல் 14 வரை இந்த இடையே பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

ரயில் நேர மாற்ற விவரங்கள்

இந்நிலையில், 2025 ஜூலை 9 முதல் 14 வரை திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி–காரைக்கால் பயணிகள் ரயிலும், காரைக்கால் நிலையத்திலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்–திருச்சி ரயிலும் காரைக்கால்–திருவாரூர் இடையே ரத்து செய்யப்படும். ஆனால், திருவாரூர்–திருச்சி மற்றும் திருச்சி–திருவாரூர் இடையே வழக்கமான நேரத்தில் ரயில்கள் இயங்கும்.

பராமரிப்பு பணி காரணமாக மாற்றம்

கோவை – நாகர்கோவில் மாற்றம் குறித்த விவரம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட தகவலின்படி, மதுரை–திண்டுக்கல் மார்க்கத்தில் வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர் இடையே தண்டவாளம் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், கோவை–நாகர்கோவில் விரைவு ரயில் 2025 ஜூலை 3 முதல் 31 வரை கோவையில் காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும். திண்டுக்கல்–நாகர்கோவில் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் விவரம்

இத்துடன், இவ்வேளையில் மாற்றாக, திண்டுக்கல்–நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் 2025 ஜூலை 3 முதல் 31 வரை ஞாயிறு, புதன்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் இயக்கப்படும். இந்த ரயில் திண்டுக்கலில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலில் இரவு 9.05 மணிக்கு வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.