கோவை மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்.. அடுத்த 90 நாட்களுக்கு இந்த ரூட் தான்!

Coimbatore Traffic Changes : கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கிட்டதட்ட 75 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால், மேட்டுப்பாளையம் சாலையில் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்.. அடுத்த 90 நாட்களுக்கு இந்த  ரூட் தான்!

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

Published: 

13 Aug 2025 06:15 AM

கோவை, ஆகஸ்ட் 13 : கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளதால், மூன்று மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் (Coimbatore Mettupalayam Traffic Diversion) செய்து மாநகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று கோவை. கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலை வசதிகள் அரசு செய்து வருகிறது. சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகள், மேம்பாலம் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை அரசு செய்து வருகிறது. இதனால், அங்கு போக்குவரத்து சற்று குறையக்கூடும். இந்த நிலையில் தான், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.75 கோடியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதுஇதற்கான பணிகளும் நடந்து வருகிறது. கிட்டதட்ட 75 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது, பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதனால், அடுத்த 90 நாட்களுக்கு கோவை மேட்ப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுகாந்திபுரம், பூமார்க்கெட், வடகோவை வழியாக மேட்டுப்பாளையம் சாலை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, பாரதி பார்க் சாலையில் ஜிசிடி கல்லூரி ரவுண்டானாவுக்குச் சென்று, வலதுபுறம் திரும்பி, தடாகம் சாலையில் வெங்கிடாபுரம், கோவில் மேடு, இடையர்பாளையம் சந்திப்பு நோக்கிச் செல்ல வேண்டும். அங்கிருந்து கவுண்டம்பாளையம் சாலையில் வலதுபுறம் சென்று துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்ல வேண்டும்.

Also Read : TET தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

கோவை மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

கவுண்டம்பாளையம் வழியாக நகரை நோக்கிச் செல்லும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் தடையின்றிச் செல்லலாம். காந்திபுரம் மற்றும் அவினாசி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் நல்லம்பாளையம் வழியாக கணபதி சாலையை அடைந்து காந்திபுரம் வழியாகச் செல்லலாம்.

மாற்றாக, வாகன ஓட்டிகள் சங்கனூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, கண்ணப்பா நகர் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து, காந்திபுரம் நோக்கிச் செல்லலாம். சிவானந்தா காலனியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஏ.ஆர்.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கங்கா மருத்துவமனை – அழகேசன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அழகேசன் சாலை வழியாக தடாகம் சாலையை அடைந்து, வெங்கிடாபுரம், கோவில் மேடு, இடையர்பாளையம் வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் செல்லலாம்.

Also Read : சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடத்தில்? முழு விவரம் இதோ!

NSR சாலை வழியாக நகரத்திற்குள் நுழையும் அனைத்து கனரக வாகனங்களும் NSR சாலை-ஸ்டேட் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை சாலை வழியாக பாரதி பூங்கா சாலையை அடைந்து, பின்னர் இடதுபுறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பில் மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.