தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் நச்சு நுரை: விவசாயமும் குடிநீரும் கடும் பாதிப்பு
Pennaiyar River Pollution:கர்நாடகத்திலிருந்து கெலவரப்பள்ளி அணை வழியாக தென்பெண்ணை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து, நச்சு நுரை உருவாகிறது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிக்கப்படுகிறது. மீன்கள் இறந்து, துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனடி அரசு நடவடிக்கை கோருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரைப் பிரச்சனை
தமிழ்நாடு மே 19: கர்நாடகத்தில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு (From Karnataka to Kelavarapalli Dam) திறக்கப்படும் சுத்திகரிக்காத தொழிற்சாலை கழிவுகளால் தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை (Toxic Foam in Pennaiyar River) உருவாகிறது. இந்த ஆற்று நீர் பல மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்குப் பெரும் ஆதாரமாக இருக்கிறது. ஆனால் நச்சு கலந்த நீர், விவசாய நிலங்களை பாதிப்பதுடன் பொதுமக்களின் உடல்நலத்தையும் கேடடடையச் செய்கிறது. நுரையால் நீரில் ஆக்ஸிஜன் குறைந்து மீன்கள் இறந்து, துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் (Public and farmers), அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை
அணையிலிருந்து திறக்கும் தண்ணீர் பலரை வாழ வைக்கிறது தென்பெண்ணை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் சென்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக உள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
நுரையுடன் வரும் நச்சு தண்ணீர்
இந்நிலையில், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீரில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நச்சு நுரை பொங்கி வரும் நிலை காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அணைக்கு திறக்கப்படுவதையே இதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் பாதிப்பு
நச்சு கலந்து வரும் இந்த நீர், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் வழியாகப் பரவி விவசாய நிலங்களை பாதிக்கிறது. அதேசமயம், இந்நீரை குடிநீராகப் பயன்படுத்தும் பொதுமக்களின் உடல்நலத்தையும் கேடடடையச் செய்கிறது.
பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை
முந்தைய ஆண்டுகளில் நச்சு நுரை குறித்து எழுந்த புகார்களை அடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. பெங்களூரில் மறுசுழற்சி செய்யப்படாத கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளே இந்த நச்சு நுரையின் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டது.
மீன்கள் இறக்கும் நிலை
தற்போது, தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் நச்சு நுரையுடன் கலந்து, தீவிர துர்நாற்றத்துடன் பாய்கிறது. இந்த நுரையால் ஆற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இதனால், மீன்கள் அதிக அளவில் இறந்து வருகின்றன.
பொதுமக்களின் கோரிக்கை
இந்த ஆற்றைச் சார்ந்த நீர் மற்றும் நிலத்தடி நீரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழுமையாக நம்பி வாழ்கின்றனர். எனவே, இந்த நிலைமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி, தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.