தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்
Chennai Tomato Price Hike : சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.15 முதல் ரூ.30 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சட்டென உயர்ந்துள்ளது.

தக்காளி விலை உயர்வு
சென்னை, ஆகஸ்ட் 15 : வரத்து குறைவு காரணமாக, சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை (Tomato Price Hike) உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ரூ.60 ஆகவும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80 ஆக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதோடு, அண்டை மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகள், பழங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் விலை சட்டென உயர்ந்துளளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கோயம்பேடு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு, சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நம் சமையல்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக தக்காளி இருக்கும் நிலையில், அதனின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Also Read : மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த இளைஞர்.. போலீஸ் ரெய்டில் கையும், களவுமாக சிக்கியது எப்படி?
தக்காளி விலை உயர்வு
அண்டை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருதால், தக்காளி விலைச்சல் குறைந்துள்ளது. இதனால், சென்னைக்கு வரும் தக்காளி அளவு குறைந்து வரத்து நிலவி வருகிறது. இதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. தினமும் கோயம்பேடு சந்தைக்கு 1,300 டன் தக்காளி வருகிது. வரத்து குறைவால் இதில் இருந்து மூன்று மடங்கள் குறைந்துள்ளது.
இதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிரடியாக ரூ.100 வரை உயர்ந்துள்ளது. இதானல் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரத்து குறைவாக இருந்தால், வரும் வாரங்களில் இன்னும் தக்காளி விலை உயரக்கூடும்.
Also Read : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு.. போக்குவரத்துத் துறை வார்னிங்
மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்
பெரிய வெங்காயம் கிலோ ரூ. 26, சின்ன வெங்காயம் கிலோ ரூ.45, உருளைக்கிழங்கு கிலோ ரூ.33, மாங்காய் கிலோ ரூ.90, கோவக்காய் கிலோ ரூ.30, வெண்டைக்காய் கிலோ ரூ.35, பச்சை மிளகாய் கிலோ ரூ.50, பூண்டு கிலோ ரூ.160, முருகங்காய் கிலோ ரூ.20, தேங்காய் கிலோ ரூ.45, பீன்ஸ் கிலோ ரூ.68, கேரட் கிலோ ரூ.60, முட்டைகோஸ் கிலோ ரூ.10, கத்திரிக்காய் கிலோ ரூ.40, பீட்ரூட் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.