Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு கவுன்சிலர் கூட இல்ல… பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம்… – தவெகவுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

Nainar Nagendran Replies to TVK : திமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை, அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

ஒரு கவுன்சிலர் கூட இல்ல… பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம்… –  தவெகவுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
நயினார் நாகேந்திரன் - விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Nov 2025 16:35 PM IST

சென்னை, நவம்பர் 13, சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கடந்த நவம்பர் 12, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தவெக தலைமையை ஏற்கும் அனைத்து கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வரலாம் என்றார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran), ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக பெரிய வார்த்தைகளை பேசணுமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை எனவும் தெரிவத்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம். 

தவெகவுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கடந்த நவம்பர் 12, 2025 அன்று செய்தியாள்ரகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக, திமுக தவிர அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றார். மேலும் பேசிய அவர், தவெக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். விஜய் அதற்கான முடிவை எடுப்பார். கரூர் சம்பவத்தை வைத்து தங்கள் கட்சியை முடக்கிவிடலாம் என நினைத்தார்கள் என்றும் அது நிறைவேறாததால், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நிலை தடுமாறி தங்களைப் பற்றி பேசி வருவதாகவும் கூறினார். த.வெ.கவில் ஸ்லீப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க : ‘5 மாதங்களில் நீங்கள் எம்எல்ஏ, அமைச்சராக போகிறீர்கள்’.. பரபரப்பை கிளப்பிய அன்புமணி!

இந்த நிலையில் அவர் பேசிய குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்  பேசியதாவது,  “திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார். நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. தேர்தலில் நிரந்தர நண்பரும், எதிரியும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, பெரிய வார்த்தைகளை பேசணுமா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

தவெகவுக்கு ஆதரவு இல்லை

ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறார். தற்போது அக்கட்சிக்கு கூட்டம் வருகிறது. தேர்தலின் போது கூட்டத்தை கூட்டிவிடலாம். ஆனால், ஆட்சிக்கு வர வேண்டும். மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். பாஜகவில் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம்.. 1,200க்கும் அதிகமான எம்எல்ஏ-க்களுக்கு மேல் இருக்கிறோம்.

இதையும் படிக்க : மனிதாபிமானமற்ற செயல், போர்க்கால நடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கரூர் விவகாரத்தில் விஜய் மட்டுமில்லை. யாராக இருந்தாலும் தனி நபரை தாக்கிப் பேசினால், பாஜக ஆதரவு தராது. நாங்கள் தவெகவுக்கு ஆதரவில்லை. எந்த ஒரு தனி நபரும் தாக்கப்படக் கூடாது என்பதற்காகவே அப்படி பேசினோம். கவுன்சிலர் கூட இல்லாத தவெகவில், தேர்தலில் தனக்கும் திமுகவுக்கும் போட்டி என்பது விந்தையிலும் விந்தை என்று தெரிவித்துள்ளார்.