Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாக்காளர் திருத்தப் பட்டியலை திமுக எதிர்ப்பது இதற்குதானா? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

special intensive revision: தமிழகம் முழுவதும் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, தமிழகம் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் திருத்தப் பட்டியலை திமுக எதிர்ப்பது இதற்குதானா? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!
நிர்மலா சீதாரமான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Nov 2025 11:52 AM IST

கோவை, நவம்பர் 12: தமிழ்​நாடு முழு​வதும் SIR (special intensive revision) பணி​களுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திமுக போராட்​டம் நடத்​து​வது ஆச்​சரி​யம் அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்கள் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நிர்மலா சீதாரமான் நேற்று கோவை வந்தார். அங்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வரி குறைப்பு குறித்து கலந்துரையாடினார். அதோடு, கடைகளுக்கும் சென்று பொருட்களை வாங்கும் பொதுமக்களை சந்தித்தார். குறிப்பாக இல்லத்தரசிகளிடம் வரி குறைப்பு காரணமாக பலன் கிடைத்ததா என கேட்டறிந்தார்.

இதையும் படிக்க : கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 2 சிறுமிகள்.. பத்திரமாக மீட்ட போலீசார்!

தொடர்ந்து, கோவையில் நடந்த பாஜக கோவை கோட்ட அணி பிரி​வு​கள், மாநில மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் கூட்​டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், SIR ​நட​வடிக்​கையை பாஜக கொண்டு வந்​தது போல் திமுக-​வினர் பேசுகின்​ற​னர். கடந்த 1952ம் ஆண்டு முதல் 13 முறை SIR நடை​பெற்​றுள்​ளது. அப்​போது காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் இருந்த திமுக எது​வும் செய்​யாமல், தற்​போது மட்​டும் ஏன் போராட்​டம் நடத்​துகிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, முதல்​வர் ஸ்டா​லின் என்ன சொல்​கி​றோம் என புரி​யாமல் ஒரு வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். துணை முதல்​வர் உதயநிதி SIR என்​றால் என்ன என தெரி​யாமல் revision என்​பதை restriction என சொல்கிறார்.

தங்​களின் ஆட்​சி​யின் தோல்வி​களை மறைக்க திமுக இது போன்ற நிலைப்​பாட்டை எடுத்து வரு​வதாகவும், எதிர்க்​கட்​சிகளோ, பாஜகவோ வெற்றி பெற்​றால் EVM இயந்​திரங்​கள் மீது குற்​றம்சாட்​டு​கின்​ற​னர். திமுக வெற்றி பெறும்போது எது​வும் எதிர்த்து பேசுவ​தில்​லை என்றும் சாடினார். தமிழ்​நாட்​டில் கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர். ஒரே பெயர், ஒரே சொந்​தக்​காரர்​கள் பெயர், ஒரே வயது. இருப்​பினும் அட்டை எண்​கள் மட்​டும் வேறு. 933 வாக்​காளர்​கள் போலி முகவரி​யில் உள்​ளனர். இது​போன்ற முறை​கேடு​களை நீக்க வேண்​டா​மா. கொளத்​தூர் தொகு​தி​யில் இத்​தகைய முறை​கேடு​களால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்​றாரா என நாங்​கள் கேட்​கலா​மா?  என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!

மேலும் பேசிய அவர், பீகாரில் தேர்​தல் நடை​பெறும் நிலை​யில், ராகுல் காந்தி ஹரி​யா​னா​வில் வாக்கு திருட்டு நடந்​துள்​ளது என பேசுகி​றார். பீகாரில் 22 லட்​சம் வாக்​காளர்​கள் இறந்​தவர்​கள். இருப்​பினும் வாக்​காளர் பட்​டிய​லில் இடம்​பெற்​றுள்​ளனர். 7 லட்​சம் வாக்​காளர்​கள் ஒரு இடத்​தில் மட்​டுமின்றி மேலும் வேறு இடத்​தி​லும் பெயர் பதிவு செய்​துள்​ளனர். அதோடு, 35 லட்​சம் பேர் நிரந்​தர​மாக பீகாரை விட்டு வெளி​யேறி விட்​டோம் என கூறி​யுள்​ளனர். அப்படியென்றால், பீகாரில் மட்​டும் 64 லட்​சம் பேரின் பெயர் வாக்​காளர் பட்​டியலில் இருக்க கூடாது. அதற்கு தான் தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது என்றார்.