தூத்துக்குடியில் உலக தரத்தில் கப்பல் கட்டும் தளம்…. 55,000 பேருக்கு வேலை – டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

Tamil Nadu’s Mega Project : தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் உலக தரத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும். இதன் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பேசினார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூத்துக்குடியில் உலக தரத்தில் கப்பல் கட்டும் தளம்.... 55,000 பேருக்கு வேலை - டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

டி.ஆர்.பி.ராஜா

Updated On: 

20 Sep 2025 15:55 PM

 IST

தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா (T.R.B.Raja) செப்டம்பர் 20, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை நோக்கி ஒட்டுமொத்த உலகத்தின் முதலீட்டாளர்கள் படையெடுத்து வருகிறார்கள். பல துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமையவிருக்கிறது. இதன் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒன்றிய அரசுடன் இணைந்து இதனை செயல்படுத்தவிருக்கிறோம். இந்த பணிகள் வெகு விரைவில் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்கும். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.31 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளத என்று குறிப்பிட்டார்.

தூத்துக்குடியில் உலக தரத்தில் கப்பல் கட்டும் தளம்

முன்னதாக தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையத்தை மத்திய கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.350 கோடி அளவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் முக்கிய மூன்று துறைமுகங்களின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி துறைமுகத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் உலகத்தரத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க : ’தமிழகத்தில் பாஜகவுக்கு No Entry தான்’ திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மேலும் பேசிய அவர்,  தமிழக அரசுடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் உருவாக்குவதற்கான அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறியவுடன், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்.  இந்தியாவை கப்பல் கட்டும் துறையில் உலக நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2030 ஆண்டுக்குள் கப்பல் கட்டும் துறையில் இந்தியா உலக டாப் 10 நாடுகளில் இடம்பிடிக்கும் எனவும், 2047 ஆண்டுக்குள் டாப் 5 நாடுகளுக்குள் வருவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பேசினார்.

இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் அரசுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாநகர நிர்வாகி ஆனந்தகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில், “தூத்துக்குடியில் முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள பரந்த பரப்பளவிலான உப்பளங்களை கப்பல் கட்டும் தளம்’ என்ற பெயரில் அபகரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக முள்ளக்காடு பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசுத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  உப்பளங்கள் இயற்கை வளத்தையும், உள்ளூர் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை இழப்பது சுற்றுச்சூழல் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.