குஷியில் மாணவர்கள்… தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Thoothukudi Local Holiday : சமீபத்தில் தான் காலாண்டு விடுமுறை முடிந்த நிலையில், மீண்டும் மாணவர்கள் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 அக்டோபர் 27ஆம் தேதி (திங்கள் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

தூத்துக்குடி, அக்டோபர் 11 : திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரத்தையொட்டி, 2025 அக்டோபர் 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிறவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு பொருந்தாது என்றுவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் தான் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நிறைவடைந்தது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை இருந்தது. அன்று முதல் 2025 அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை இருந்து. காலாண்டு விடுமுறையுடன் ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி வந்தது. அதன்பிறகு, 2025 அக்டோபர் 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகளுக்கு திறக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு நடைபெற்று வரும் நிலையில், அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே, தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். தீபாவளி பண்டிகை 2025 அக்டோபர் 20ஆம் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால், 4 நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, 2025 அக்டோபர் 18ஆம் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 19ஆம் தேதி ஞாயிறு, அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி விடுமுறை, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில், 2025 அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்




தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
எனவே, மாணவர்கள் 4 நாட்கள் விடுமுறைக்கு வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தீபாவளி முடிந்த ஒரு வாரத்திற்குள் தூத்துக்குடி மாவட்ட மாணவர்ளுக்கு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை வருகிறது. அதாவது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 அக்டோபர் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனால், அம்மாவட்டத்திற்கு 2025 அக்டோபர் 27ஆம் தேதி (திங்கள் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் குறையும் கட்டணம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
ஆனால் அதே சமயம் அத்தியாவசிய பணிகள் மற்றும் அது சார்ந்த பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக 2025 நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியம் இளம்பகவத் அறிவித்துள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹாரத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர். சூரம்சம்ஹாரம் வரை கடலில் பக்தர்கள் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.