தமிழக அரசின் காலை உணவுத் திட்டம்…. தெலங்கானாவில் அறிமுகப்படுத்தபோகிறேன் – ரேவந்த் ரெட்டி உறுதி
Breakfast Scheme for Telangana: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி செப்டம்பர் 25, 2025 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காலை உணவு திட்டத்தை தனது மாநிலத்தில் அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் - ரேவந்த் ரெட்டி
சென்னை, செப்டம்பர் 25 : தமிழ்நாடு அரசு சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தலைமையில் செப்டம்பர் 25 , 2025 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (Revanth Reddy) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் தெலங்கானாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தெலங்கானாவில் காலை உணவு திட்டம்
இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் கூறியதாவது, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. தமிழ்நாடு என்பது கல்வித் தந்தை காமராஜரின் மண். இன்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை கொண்டாடுகிறோம். இந்த விழா தமிழக இளைஞர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கக்கூடியது. இத்தகைய கல்வித் திட்டங்களை இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டும்.
இதையும் படிக்க : இனி சண்டேவும் பிரச்சாரம் இருக்கு.. 2026 பிப்ரவரி வரை விஜயின் மாஸ்டர் பிளான்..
காலை உணவு திட்டம் என்பது உண்மையில் இதயத்தை தொடும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தை தெலங்கானா அரசு அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளது. அதேபோல், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் தமிழர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளன.
வரலாற்று அளவில் தமிழர்களுக்கும் தெலுங்கு மக்களுக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. தெலங்கானாவில் கல்விக்கே எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். கல்வித் துறையில் பல நலத்திட்டங்களை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தெலங்கானாவில் இருந்து சுமார் 1.10 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. அதனால் யங் இந்தியா திட்டத்தை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது என்று பேசினார்.
இதையும் படிக்க : முதலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி விசுவாசமாக இருக்கட்டும் – செல்வப்பெருந்தகை..
‘அவர்களுக்கு பயம் வர வேண்டும்’
நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வியில் தமிழ்நாட்டின் எழுச்சியை பொறுக்க முடியாமல், தடைகளை ஏற்படுத்த ஒன்றியத்தில் நினைக்கிறேன். நம் திட்டங்களாலும், உங்கள் சாதனையாலும் அவர்களுக்கு பயம் வர வேண்டும். அரசு உருவாக்கித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதி சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் நிகழ்த்திய புரட்சி தான் இன்று நாம் வேகமாக நடைபோட காரணம் என்று பேசினார்.