Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் பகவத் கீதையை அடைக்க முடியாது – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Madras High Court Bench: பகவத்கீதை நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவத்தை பிரதிபலிக்கிறது. யோகா-வைப் பொறுத்தவரை, அதை மதத்தின் வழியாகப் பார்ப்பது கொடூரமானது. இது உலகளாவிய ஒன்று என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்து வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் பகவத் கீதையை அடைக்க முடியாது – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Dec 2025 11:43 AM IST

மதுரை, டிசம்பர் 23, 2025: பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்து வைக்க முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.பகவத் கீதைக்கு என்ன பொருந்துகிறதோ அது வேதாந்தத்திற்கும் பொருந்தும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி விமல் மதுரை அமர்வில் “ஆர்ஷ வித்யா பரம்பரா அறக்கட்டளை அமைப்பை, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் அளிக்க உத்தரவிடக் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு பின்னணி என்ன?

இந்த மனுவை விசாரித்த நீதிபதி G.R.சுவாமிநாதன், “மனுதாரர் அறக்கட்டளையை வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய 2025 அன்று மனு செய்யப்பட்டது, ஆனால் பதிவு செய்ய மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010ன் கீழ் பதிவு செய்ய, மத்திய உள்துறையில் உள்ள இயக்குனரிடம் மனுதாரர் விண்ணப்பித்தார். விண்ணப்பம் 3 ஆண்டுகளாக பதிவு செய்யப்படவில்லை. உரிய விளக்கம் அளித்த பிறகும், அதிகாரிகளால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..

மத்திய அரசு தரப்பில், “மனுதாரர் FCRA இன் விதிகளை மீறியதால், பதிவு பெற உரிமை இல்லை. பல அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெறுகின்றன, மேலும் இதில் தேசியப் பாதுகாப்புக் சார்ந்த கோணமும் உள்ளது என குறிப்பிட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறில்லை. மனுதாரரின் மனுவை நிராகரிப்பதற்கான பிரதான காரணம், மனுதாரர் ஒரு மத அமைப்பாகத் தெரிகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல:

எந்தவொரு நபரும் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதிவுச் சான்றிதழைப் பெறாவிட்டால் வெளிநாட்டு பங்களிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. பகவத் கீதை, சொல்லிக் கொடுப்பதால் மனுதாரர் ஒரு மத அமைப்பு என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல. இது ஒரு தார்மீக அறிவியல். அலகாபாத் உயர் நீதிமன்றம், பகவத் கீதையை தேசிய தர்ம சாஸ்திரமாக அங்கீகரிக்கலாம் என கூறியுள்ளது.

மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர், லோகமான்ய திலகர் போன்ற நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலர், காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராட நாட்டைத் தூண்டுவதற்காக பகவத் கீதையைப் பயன்படுத்தியதாக கற்றறிந்த நீதிபதி குறிப்பிட்டார்.

பிரிவு 51-A(f) நமது கூட்டு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் பாதுகாப்பது பற்றி பேசுகிறது. பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்து வைக்க முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதைக்கு என்ன பொருந்துகிறதோ அது வேதாந்தத்திற்கும் பொருந்தும்.

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தத்துவத்தை பிரதிபலிக்கிறது:

இது நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவத்தை பிரதிபலிக்கிறது. யோகாவைப் பொறுத்தவரை, அதை மதத்தின் வழியாகப் பார்ப்பது கொடூரமானது. இது உலகளாவிய ஒன்று. கலிபோர்னியா நீதிமன்றம் , யோகா பயிற்சி என்பது உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்தல்,
மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் மதச்சார்பற்ற அனுபவம் என்று குறிப்பிட்டு உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மனுதாரர் அறக்கட்டளை, வருமான வரிச்சட்டம், 1961 இன் பிரிவு 12A இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தால் மனுதாரருக்கு ஆதரவாக வழங்கப்பட்ட சான்றிதழ் செல்லுபடியாகும். FCRA, 2010 எந்த மேலாதிக்க விதியையும் கொண்டிருக்கவில்லை.

எனவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் FCRA இயக்குனர் மனுதாரரின் மனுவை ஏற்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை, உள்துறை அமைச்சகத்தின் FCRA இயக்குனர் , மனுதாரரிடம் ஆவணங்களை பெற்று விதிகளுக்கு உட்பட்டு 3 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.