இன்று முதல் பகலில் வெயில் சுட்டெரிக்கும்.. மாலையில் மழை கொட்டும்.. வானிலை அப்டேட் இதோ!!

Weather Update: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். ஏப்.03 முதல் 05ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இன்று முதல் பகலில் வெயில் சுட்டெரிக்கும்.. மாலையில் மழை கொட்டும்.. வானிலை அப்டேட் இதோ!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

03 Apr 2026 06:29 AM

 IST

Tamilnadu Weather Today: தென் தமிழக பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன்வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. சில பகுதிகளில் லேசான மழை பெய்தாலும், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோடை காலத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதை உணர முடிகிறது.

இதையும் படிக்க: பிரதமர் மோடி சென்னை வருகை.. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்.. முக்கிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில் இன்று (ஏப்.03) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் மழை தீவிரம் சற்று அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது.

வரும் நாட்களில் வானிலை நிலவரம்:

தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் ஏப்.4ம் தேதியும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் ஏப்.5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

7ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும். ஆனால் வடக்கு உள் தமிழகத்தில் வறண்ட நிலை தொடரலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். ஏப்.03 முதல் 05ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பகலில் வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் மழை வாய்ப்பு இருக்கும்.

இதையும் படிக்க: திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரித்து 36-37°C வரை செல்லக்கூடும். இதனால் நகர்ப்புறங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… பள்ளி மாணவரின் வக்கிர செயல்… நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!
“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்”.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!
தபால் வாக்குகளை கையாள புதிய யுக்தி… திருச்சியில் அமைந்தது சிறப்பு மையம்!
பிரதமர் மோடி வருகை.. ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார்.. உச்சக்கட்ட பாதுகாப்பில் சென்னை, புதுச்சேரி!!
தேர்தல் இலச்சினையான எறும்புத் தின்னிகள்- நாமக்கல் முட்டை… வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு…!
சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு… எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் இயக்கம் தொடக்கம்!
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..