Weather Alert: தமிழ்நாட்டில் இன்று இங்கெல்லாம் மழை.. ரெடியா இருங்க!

தமிழகம் முழுவதும் இன்று முதல் அக்டோபர் 11 வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் இது ஒரு நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

Weather Alert: தமிழ்நாட்டில் இன்று இங்கெல்லாம் மழை.. ரெடியா இருங்க!

மழை நிலவரம்

Updated On: 

07 Oct 2025 06:37 AM

 IST

தமிழ்நாடு, அக்டோபர் 7: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று (அக்டோபர் 7) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய நல்ல மலைக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்யும் எனவும் வெப்பநிலை இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.

மேலும் நேற்று (அக்டோபர் 6) தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்தது.  குறிப்பாக திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய வட மாவட்டங்கள் இதனால் பலன் பெற்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கனமழை எதிரொலி;. மாணவர்களின் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுரைகள் ; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

இதேபோல் கரூர், திருச்சியிலும் மழைப்பொழிவு இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழைப்பொழிவு பதிவானதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் வானிலை மாற்றம் கண்டு லேசான முதல் மிதமான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி, பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் சற்று சிரமமடைந்தனர்.

வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில் அக்டோபர் 7ம் தேதியான இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மழை பொழிவானது வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Rainy Season: மழைக்காலத்தில் வீட்டிற்குள் ஆங்காங்கே ஈக்களா..? எளிதாக விரட்டுவது எப்படி..?

அதே சமயம் குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழைப்பொழிவு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.