செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால்…. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
Supreme Court on Senthil Balaji Plea: போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் தன் மீதான கடுமையான கருத்துக்களை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, அக்டோபர் 6 : போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாகக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தீர்ப்பில் உள்ள கடுமையான கருத்துக்களை நீக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜியின் வழக்கை ஏன் டெல்லிக்கு மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அவர் அமைச்சராக விரும்பினால் அதற்கான உரிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடந்தது என்ன ?
போக்குவரத்துத்துறையில் லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த சில கருத்துக்கள் மிகவும் கடுமையாக இருந்ததாகவும் அதனை நீக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டிருந்தது. இந்த வழக்கு அக்டோபர் 6, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் மனு மீதான விசாரணைக்கு பிறகு பேசிய நீதிபதிகள், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அபய் எஸ்.ஓகா ஓய்வு பெற்றபின் இந்த வழக்கை ஏன் தாக்கல் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர். அப்போது செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமின் உத்தரவில் அவர் அமைச்சராகக் கூடாது என்று தடை எதுவும் இல்லை குறிப்பிடவில்லை. அவர் அமைச்சராவதை தடுக்க முடியாது என வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையும் படிக்க : சட்டமன்ற முடிவுக்கு எதிரானது… ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு – என்ன நடந்தது?




2 வாரங்கள் கெடு
இதனையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால் அதற்கான மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். மேலும் இந்த லஞ்சம் வாங்கிய வழக்கை ஏன் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை இன்னும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க : தமிழ்நாடு போராடுமா? யாருடன் போராடும்? – ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி
கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் வாங்கியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த ஜூன் 2023 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் 2024, செப்டம்பர் மாதம் அவருக்கு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் அவரது வழக்கில் தன் மீது நீதமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இந்த கருத்துக்களை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.