மாரத்தான் ஓடும்போதே பிரிந்த உயிர்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் ஷாக்
Chennai Youth Dies In Marathon : சென்னையில் நடந்த மாரத்தானில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரத்தான் போட்டியில் ஒடிக் கொண்டிருக்கும்போது, வலிப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

சென்னை, அக்டோபர் 06 : சென்னையில் நடந்த மாரத்தானில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரத்தான் போட்டியில் ஒடிக் கொண்டிருக்கும்போது, மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். சமீப காலங்களில் இளைஞர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கான உறுதியாக காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில், சென்னையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர் பலி
அதாவது, மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பரமேஷ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2025 அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று சென்னை கிண்டில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டியில் இளைஞர் பரமேஷ் கலந்து கொண்டார். மாரத்தான் போட்டி தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பரமேஷுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Also Read : டெலிவரி பாய் வேடம்.. தொடர் திருட்டு.. சென்னையில் இருவர் கைது!
இளைஞர் பரமேஷ் மயக்கமடைந்ததை கண்ட மற்ற போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, பரமேஷ் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். கோட்டூர்புரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 37 வயதான நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிலிந்த் குல்கர்னி. இவர் தனது மனைவியுடன் புனேவில் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டார்.
Also Read : பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – என்ன நடந்தது?
அப்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். எண்ணெய் சார்ந்த பொருட்கள், பிட்சா, பர்கர் என ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மதுபானம், புகைபிடித்தல் போன்ற பழக்கத்தை கைவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.