பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – என்ன நடந்தது?
PMK Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக அக்டோபர் 5, 2025 அன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களாக பாமக உட்கட்சி பூசல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பாமக தலைவர் யார் என்பதில் ராமதாஸ் (Ramadoss) மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே வார்த்தை போர் தொடர்ந்தது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளிாகியிருந்தது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக அக்டோபர் 5, 2025 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு காலையில் இருந்து உடலில் அசௌகரியம் இருந்ததாகவும் இதனால் மருத்துவமனையில் அவருக்கு இதய பரிசோதனைகள் செய்யப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மருத்துவ அறிக்கைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற பாமக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : கனமழை எதிரொலி…. மாணவர்களின் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுரைகள் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு




பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்க்குமரனை பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்தார். தமிழக்குமரன் பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி மீது குற்றச்சாட்டு
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தூங்கும்போது தலையணை வைத்து என் முகத்தில் அமுக்குமாறு பதிவிட்ட நபருக்கு அன்புமணி கட்சியில் பதவி வழங்கியுள்ளார். அவதூறான பதிவுகளை பரப்புவதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதையும் படிக்க : சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை – தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 10 விமானங்கள் – பரபரப்பு தகவல்
அப்போது அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு உயிர் கூட பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறையும் அதற்கு வழிகாட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழந்த இரங்கல்கள் என்று தெரிவித்தார்.