கனமழை எதிரொலி…. மாணவர்களின் பாதுகாப்புக்கு கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுரைகள் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
Rain Alert : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பவுள்ள நிலையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய 6 அறிவுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை (Rain) பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் அக்டோபர் 6, 2025 அன்று பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் கனமழை பெய்து வருவதால் அதற்கு முன்னேற்பாடுகளையும் பெற்றோர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழையை சமாளிக்க மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சில அறிவுறைகளை வழங்கியிருக்கிறது. இந்த கட்டுரையில் அது குறித்து பார்க்கலாம்.
ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து அக்டோபர் 6, 2025 அன்று மாணவிகள் பள்ளி திரும்பவுள்ளனர். இதனையடுத்து பள்ளி கல்வித்துறை சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : வீட்டிலுள்ள பழைய பொருட்களை அகற்ற வேண்டுமா? மாநகராட்சியின் புதிய சேவை.. மிஸ் பண்ணாதீங்க




ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 6 அறிவுரைகள்
- பள்ளிக்கு சைக்கிளில் வரும்போது சகதியில் வழுக்கி விழும் அபாயம் குறித்து மாணவர்களுக்கு எச்சரிக்க வேண்டும்.
- பள்ளியின் சுற்றுச்சுவருக்கு 20 அடி தொலைவு வரை செல்லாதவாறு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
- விடுமுறை நாட்களில் ஏரி, குளம், மற்றும் ஆறுகளில் குறிப்பதை தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும்.
- பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
- தொடர் மழை காரணமாக மின் கசிவு, மின் கோளாறுகள் உள்ளனவாக என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் கட்டடப் பராமரிப்பு பணி, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும்.
இதையும் படிக்க : கேப் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ.. வானிலை மையம் அலர்ட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து அக்டோபர் 6, 2025 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.