இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. கோடை வெயிலும் கொளுத்தும்.. வானிலை அப்டேட் இதோ..
Weather Update: இன்று முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.6ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைஒட்டி இருக்கக்கூடும்.

கோப்புப் புகைப்படம்
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆறுதல் செய்தி கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..
இன்று கனமழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (மே.3) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
மே.4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கன மழை பெய்யக்கூடும்
மே.5ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். மே.06ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மலை பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை மாற்றம்:
இன்று முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.6ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைஒட்டி இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் சலசலப்பு.. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே வெடிக்கும் சலசலப்பு, அதிகாரப் போட்டி..
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.