சென்னை, டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை.. இன்றைய வானிலை நிலவரம்..

Tamilnadu weather Forecast: மார்ச் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. மார்ச் 22 மற்றும் மார்ச் 23 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

சென்னை, டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த மழை.. இன்றைய வானிலை நிலவரம்..

கோப்புப் புகைப்படம்

Updated On: 

20 Mar 2026 06:33 AM

 IST

Tamilnadu Weather: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களே வராத நிலையில், தற்போதே நாளுக்கு நாள் வெயில் அதிகரித்தது. இந்தசூழலில், தமிழகத்தில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதேபோல், சென்னையிலும் நேற்றைய தினம் பரவலாக மழை பெய்தது சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா முதல் தெற்கு உட்புற கர்நாடகா வரை நீடிக்கும் ஒரு சுழற்சியும், தமிழகத்தின் உட்பகுதிகள் மற்றும் கேரளாவை ஒட்டிய வளிமண்டல மேலடுக்கில் மற்றொரு சுழற்சியும் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிக்க : இறுதியாகும் பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு.. மீண்டும் டெல்லி சென்ற இபிஎஸ்..!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்றைய தினம் (மார்ச் 20) மழையின் பரப்பளவு சற்று குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், உள் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

நாளை (மார்ச் 21) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை முதல் மார்ச் 24 செவ்வாய்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

மார்ச் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. மார்ச் 22 மற்றும் மார்ச் 23 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். மார்ச் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். மார்ச் 22 மற்றும் மார்ச் 23 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : mano thangaraj Tamil Nadu Election: அடுத்தடுத்து வெற்றி… பத்மநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா டி.மனோ தங்கராஜ்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்