லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு… கோரிக்கை இதுதான்..!
Tamil Nadu sand lorry strike : தமிழகத்தில் ஆறு மணல் குவாரிகள் மூடப்பட்டதால் 55,000 லாரிகள் வேலை இழந்துள்ளன. மணல், எம்-சாண்ட், ஜல்லி விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்லைன் விற்பனையை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் 2025 மே 23 முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட

லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு மே 06: தமிழகத்தில் (Tamilnadu) ஆறு மணல் குவாரிகள் (Sand quarries) மூடப்பட்டதால் 55,000 லாரிகள் இயங்காமல், 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ‘எம்-சாண்ட்’, ஜல்லி விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் கட்டுமானத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவு கனிமங்கள் வெட்டி, வெளிமாநிலங்களுக்கு விற்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், விற்பனையை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 2025 மே 23 முதல் தமிழகம் முழுவதும் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். திருச்சியில் நடந்த கூட்டத்தில், விலை குறைக்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆன்லைனில் வேண்டும் மணல் விற்பனை
தமிழகத்தில் மணல் மற்றும் கிரஷர் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், விற்பனையை ‘ஆன்லைன்’ முறையில் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மணல் லாரி உரிமையாளர்கள் வருகிற 2025 மே 23ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஒரூ லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு
இந்தத் தீர்மானம் குறித்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் செல்ல ராஜாமணி மற்றும் எஸ். யுவராஜ் ஆகியோர் தெரிவித்ததாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் ஆறு மணல் குவாரிகள் இயங்காத நிலையில் உள்ளன. இதனால் கட்டுமானத் துறைக்கு ஆற்று மணல் கிடைக்காத நிலையில் உள்ளது. இதன் விளைவாக, மணல் ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட 55,000 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தில் நம்பிக்கையுடன் இருந்த ஒரூ லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ‘எம்-சாண்ட்’, ‘பி-சாண்ட்’ மற்றும் ஜல்லி விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றனர். மேலும், அரசு அனுமதிக்கும் அளவை மீறி கனிம வளங்களை வெட்டி எடுத்து, அதிக விலைக்கு வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். இதில் நடைச்சீட்டு முறைகேடு மற்றும் அதிக பாரம் ஏற்றுதல் போன்ற காரணங்களால் அரசு வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மே 23 முதல் தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்காமல் காத்திருப்பு போராட்டம்
இதையடுத்து, குவாரிகள் மற்றும் கிரஷர்களை அரசுடைமையாக்கி, ஜல்லி மற்றும் எம்-சாண்ட் விற்பனையை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, மே 23 முதல் தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்காமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
திருச்சியில் ஆலோசனை கூட்டம் – திமுக அரசுக்கு கண்டனம்
தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில், எம்-சாண்ட் விலையை அரசு குறைக்காததற்கும், மணல் குவாரிகளை திறக்காததற்கும் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டம் என்பது அவசியம் என்ற முடிவும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.