கரூர் கூட்ட நெரிசல் குறித்து ஷாக் தகவல்.. எம்.பி. சொன்னது உண்மையா?

TVK Rally Stampede : கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி மறுத்து, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், தவெகவுக்கும் ஒதுக்கியதாக அதிமுக எம்.பி இன்பதுரை விமர்சித்து இருந்தார். இதற்கு தற்போது தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இன்பதுரை சொல்வது பொய் என கூறியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் குறித்து ஷாக் தகவல்.. எம்.பி. சொன்னது உண்மையா?

கரூர் கூட்ட நெரிசல்

Updated On: 

28 Sep 2025 14:08 PM

 IST

கரூர், செப்டம்பர் 28 : கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டும் தவெக மற்றும் அதிமுகவுக்கு குறுகலான வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியதாக மாநிலங்களவை அதிமுக எம்.பி. இன்பதுரை கூறியிருந்தார். இதற்கு தற்போது தமிழ்நாடு சரிபார்ப்பு பிரிவு ஆதாரத்துடன் விளக்கியுள்ளது. அதாவது, இது தொடர்பாக அதிமுக எம்.பி இன்பதுரை சொல்வது பொய் என கூறியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்த அவர், மாலை 3.30 மணியளவில் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்றார். கரூருக்கு ஒரு மணி நேரத்திற்கு சென்றுவிடலாம். ஆனால், தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், விஜய் செல்ல தாமதமானது.

விஜய் இரவு 7 மணிக்கு தான் கரூருக்கு சென்றிருந்தார். அங்கு வேலுச்சாமிபுரத்தில் அவரது பரப்புரை வாகனம் நுழைவதற்கு முன்பே, தொண்டர்கள், ரசிகர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது, தொண்டர்கள், ரசிகர்கள் மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், சில குழந்தைகள் காணப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : கரூரில் பெருந்துயரம்.. ரத்து செய்யப்படுகிறதா விஜயின் பரப்புரை? அடுத்த பிளான் என்ன?

எம்.பி. சொன்னது உண்மையா?


இந்த நிலையில், விஜயை கைது செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் கையில் எடுத்த எதிர்க்கட்சிகளை இந்த உயிரிழப்புக்கு திமுகவை காரணம் என கூறி வருகின்றனர். அதிமுக மாநிலங்களவை எம்.பி இன்பதுரை குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை கேட்டு அவருக்கு அனுமதி மறுத்துவிட்டு கடந்த ஆண்டு முதல்வருக்கும், உதயநிதிக்கும் பிரச்சாரம் செய்ய கொடுத்ததாக கூறியிருந்தார். இதற்கு தற்போது தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

Also Read : கரூர் கொடூரம்.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், “கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அனுமதி கேட்டதாக இன்பதுரை எம்.பி சொன்ன பொய். முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டதாக காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இடம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா. தவெக தரப்பில் அனுமதி கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா, பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இரண்டும் வெவ்வேறு பகுதி. தவெக அனுமதி வேண்டிய கடிதத்தில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டது கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

.