Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெகவின் அடுத்த மூவ்.. ஆகஸ்டில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்.. திட்டம் என்ன?

TVK Vijay State Wide Tour : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவின் அடுத்த மூவ்.. ஆகஸ்டில்  சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்.. திட்டம் என்ன?
விஜய்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jun 2025 17:22 PM

சென்னை, ஜூன் 25 : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் (Tamilaga Vettri kazhagam) 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சுற்றுப் பயணத்தை (TVK Vijay Tour) தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தஞ்சாவூரில் உள்ள சுற்றுப் பயணத்தை விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் விஜய் தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி கட்சி தொடங்கியதாக விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து, மாநாடு, நிர்வாகிகள் நியமனம், 2ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் பணியில் விஜய் இறங்கியுள்ளார்.  2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலமே உள்ளது. இதனால்,  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்

குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. 2026 தேர்தலில் தமிழகத்தில்  நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும்,   நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என தனித்து போட்டியிடும் என சொல்லப்படுகிறது. எனவே, தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில்,  புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம்  கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளது. அண்மையில் கூட, பூத் கமிட்டி மாநாட்டை விஜய் கோவையில் நடத்தினார். அதைத் தொடர்ந்து, 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி விருது விழா மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது.

மேலும், விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இதனால், விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இப்படியான சூழலில், 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திட்டம் என்ன?

முதற்கட்டமாக 100 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. மேலும், டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பல இடங்களில் வாகன பேரணி மூலம் சென்று, மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். டெல்டா சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட சில நாட்களுக்கு பிறகு, கொங்கு மண்டலத்திலும், அதற்கு பிறகு தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேசிய ஆதவ் ஆர்ஜுனா, “ஒரு மாதத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவ்ர விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொள்ள உள்ளார். விஜய் தேர்தலில் வெற்றி பெற்றார் சர்கார் படத்தில் உள்ளதை விட பெரியதாக செய்வார்” என தெரிவித்தார். எனவே, விஜய் சுற்றுப்பயணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.