Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
300 பேருடன் ஈரானில் இருந்து வந்த விமானம்.. டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கம்!

300 பேருடன் ஈரானில் இருந்து வந்த விமானம்.. டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 20:43 PM IST

ஈரானில் இருந்து டெல்லி விமான நிலைய முனையத்திற்கு 4 நேபாள குடிமக்கள் உட்பட 300 பயணிகளை ஏற்றி விமானம் வந்தது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான பதட்டங்களுக்கு இடையில் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களை ஈரானில் இருந்து மத்திய அரசு ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் அழைத்து வந்தது. மோதல் மண்டலத்திலிருந்து தப்பித்த பயணிகள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து இந்தியர்களை  அழைத்து வர ஆபரேஷன் சிந்துவின் கீழ் இந்திய அரசாங்கம் அனுப்பிய மூன்றாவது விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரானில் இருந்து டெல்லி விமான நிலைய முனையத்திற்கு 4 நேபாள குடிமக்கள் உட்பட 300 பயணிகளை ஏற்றி விமானம் வந்தது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதட்டங்களுக்கு இடையில் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களை ஈரானில் இருந்து மத்திய அரசு ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் அழைத்து வந்தது. மோதல் மண்டலத்திலிருந்து தப்பித்த பயணிகள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து இந்தியர்களை  அழைத்து வர ஆபரேஷன் சிந்துவின் கீழ் இந்திய அரசாங்கம் அனுப்பிய மூன்றாவது விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.