விஜய் வருகை… மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

TVK Vijay madurai : தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், 2025 மே 1ஆம் தேதியான இன்று மாலை 4 மணிக்கு மதுரைக்கு வருகை தர உள்ளார். இதனால், அவரை வரவேற்க காலை முதலே கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதுரை விமான நிலையத்தில் திரண்டுள்ளனர்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

01 May 2025 09:03 AM

மதுரை, மே 01:  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Vijay) மதுரை வர உள்ள நிலையில், அவரை வரவேற்க விமான நிலையத்தில் (Madurai Airport) கட்சி தொண்டர்களும், ரசிர்களும் குவிந்துள்ளனர்.  காலை 7 மணிக்கு விஜய் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து,  தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அவரை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.  ஆனால், விஜய்  மதுரை விமான நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு வர உள்ளதாக தெரிகிறது. ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் 2025 மே 1ஆம் தேதியான இன்று  மதுரைக்கு வருகை தருகிறார்.

விஜய் வருகை

கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழக எனும் கட்சியை தொடங்கினார். சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறது. அவரது கடைசி படமான ஜனநாயகத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதற்கிடையில்,  கட்சி பணிகளில் முழு நேரமாக ஈடுபட்டுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால்,  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.  இதற்கிடையில்,  கட்சியின் பூத் கமிட்டி கருத்தரங்கை  நடந்த திட்டமிட்ட விஜய், கடந்த வாரம் முதற்கட்டமாக கோவையில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்தினார்.

கோவைக்கு வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வரை ரோடு ஷோ வரை விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயின் வாகனத்தில் நின்றபடி, தொண்டர்களை சந்தித்தார்.

மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்

அவரை காண பொதுமக்கள் பலரும் கோவையில் திரண்டனர். இதனால், அன்றைய நாள் கோவை நகரமே ஸ்தம்பித்தது. மேலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இரண்டாம் கட்டமாக மதுரையில் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் 2025 மே 1ஆம் தேதியான இன்று மதுரை வர உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மதுரை வர உள்ளார்.  இதனால், விஜயை வரவேற்க காலை  முதலே ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் மதுரை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.  கொடைக்கானலில் ஜனநாயக படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.