வங்கக் கடலில் காற்றழுத்தம்… பிச்சு உதறபோகும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 2025 செட்படம்பர் 25ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, செப்டம்பர் 24 : தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டாவில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று காலை 8.30 மணியளவில் வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுகுறையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 2025 செட்படம்பர் 25ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, 2025 செப்டம்பர் 26ஆம் தேதி தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுழத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
Also Read : தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?
வங்கக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி
FISHERMEN WARNINGhttps://t.co/cAHkWzTg4J pic.twitter.com/zVb5vs4cHU
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 24, 2025
அதன்பிறகு, ஒடிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் 27ஆம் தேதி கரையை கடக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : குளு குளு சென்னை.. தொடரும் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
சென்னையை பொறுத்தவரை, இரண்டு தினங்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.