Tamil Nadu Weather Update: மாலை 6 மணிக்குள் 2 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா..?
Chennai weather: சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் 2025 ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 2025 ஜூலை 27 மாலை 6 மணிக்குள் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை நிலவரம்
சென்னை, ஜூலை 27: தமிழ்நாட்டில் (Tamil Nadu Weather) இன்று அதாவது 2025 ஜூலை 27ம் தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், 2025 ஜூலை 27ம் தேதியான இன்று மாலை 6 மணிக்குள் தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆடி மாசம் என்பதால் அடுத்த 3 நாட்கள் 50 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும், சென்னை (Chennai) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மாலை 6 மணிக்குள் எங்கெல்லாம் மழை..?
தமிழ்நாட்டின் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 2025 ஜூலை 27ம் தேதியான இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய மாலை 6 மணிக்குள் தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: கிட்னி விற்பனை மோசடி.. மருத்துவமனைக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
மற்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பா..?
தென்மேற்கு பருவமழையின் தாக்கல் காரணமாக அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை, தலைநகர் சென்னையில் மாலை 6.30 மணிக்கு சூரியன் மறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதாவது 2025 ஜூலை 27ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸாகவும் இருந்துள்ளது. ஈரப்பதமானது சுமார் 67 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை தவிர, பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால், இதனால் பல பகுதிகள் அசௌகரியம் ஏற்படலாம்.
ALSO READ: நோய் பாதித்த தெரு நாய்கள்.. கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!
இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலைகள், புதுபுதுச்சேரி, காரைக்கால், நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நாள் முழுவதும் இதே நிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.