Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாடு உற்பத்தித் துறை ஸ்டார்ட்அப்களுக்கு அழைப்பு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu startup funding: தமிழ்நாடு அரசு, உற்பத்தித் துறையை வளர்ப்பதற்காக புதிய நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. அதிநவீன உற்பத்தி, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.3-4 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 10, 2025 கடைசி நாள். form.startuptn.in/IFAM என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு உற்பத்தித் துறை ஸ்டார்ட்அப்களுக்கு அழைப்பு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
உற்பத்தித் துறையை ஊக்குவிக்க புதிய நிதியுதவி திட்டம் Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 06 May 2025 08:18 AM

கோவை மே 06: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனம் (Tamil Nadu Startup Company), உற்பத்தி சார்ந்த ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. அதிநவீன உற்பத்தி, ரோபோட்டிக்ஸ், மென்பொருள்-வன்பொருள் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு ரூ.3-4 கோடி வரை உதவி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 2025 மே 10. form.startuptn.in/IFAM என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆலோசகர் ஜலபதி கூறுகையில், இது சிறந்த தொழில்முனைவோர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார். மேலும் விவரங்களுக்கு 98428 96673 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

உற்பத்தித் துறையை ஊக்குவிக்க புதிய நிதியுதவி திட்டம்

இந்தியாவிலேயே முதன்முறையாக, உற்பத்தித் துறையில் செயல்படும் ஸ்டார்ட்அப்கள் (Startups) மேம்பட நிதியுதவி வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு ஸ்டார்ட்அப் (StartupTN) நிறுவனம் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், புதுமையான தொழில்முனைவோரை உருவாக்குவது, முதலீட்டாளர்களை ஈர்ப்பது, தொழிற்சூழலை மேம்படுத்துவது மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதாகும். அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த நிறுவனம், ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கும் முக்கிய பங்களிப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார் இதில் பங்கேற்கலாம்

இதற்காக, ‘உற்பத்தி சார்ந்த ஸ்டார்ட்அப்களுக்கு பிரத்யேக நிதியுதவி திட்டம்’ எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன உற்பத்தி, ரோபோட்டிக்ஸ், ஸ்மார்ட் சிஸ்டம், துல்லிய பொறியியல், மென்பொருள் மற்றும் வன்பொருள், சப்ளை செயின் டெக்னாலஜி போன்ற துறைகளில் இயங்கும் ஸ்டார்ட்அப்கள் இதில் பங்கேற்கலாம்.

விண்ணப்பிக்க அழைப்பு

இதுகுறித்து ஆலோசகர் ஜலபதி கூறியதாவது: “சிறந்த தொழில்முனைவுத் திட்டங்களை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் form.startuptn.in/IFAM என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 98428 96673 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

இந்த முயற்சி மூலம் தமிழகத்தின் உற்பத்தித்துறையில் புதிய உயரங்களை நோக்கி ஸ்டார்ட்அப்கள் பயணிக்கவுள்ளதாக நம்பப்படுகிறது.

ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கு அரசு ஆதரவு

தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்த மாநிலம் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது:

StartupTN – மாநில அரசின் ஸ்டார்ட்அப் மற்றும் புதுமை மிஷன், இது 10 மாவட்டங்களில் ஸ்டார்ட்அப் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

Startup and Innovation Policy 2023 – இந்தக் கொள்கை 2032 ஆம் ஆண்டுக்குள் 15,000 ஸ்டார்ட்அப்புகளை உருவாக்கும் இலக்கை கொண்டுள்ளது.

Tamil Nadu Global Investors Meet (TNGIM) – இந்த மாநாடு மூலம் அரசு பல்வேறு முதலீடுகளை ஈர்க்கிறது, 2024 ஆம் ஆண்டில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன.

கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?
கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?...
திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?
திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?...
மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்!
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்!...
வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..?
வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..?...
‘தேர்வில் தோல்வியடைவாய்’ என்றார்கள்… ஆனால் வெற்றியை வென்றேன்!
‘தேர்வில் தோல்வியடைவாய்’ என்றார்கள்… ஆனால் வெற்றியை வென்றேன்!...
சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் வருகை.. 2 நாட்கள் முன்பதிவு ரத்து!
சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் வருகை.. 2 நாட்கள் முன்பதிவு ரத்து!...
இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் உன்னி முகுந்தன்...
இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் உன்னி முகுந்தன்......
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவா?
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவா?...
ஊட்டிக்கு போறீங்களா? தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஊட்டிக்கு போறீங்களா? தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை...
தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத்திட்டம்: இப்போதே முன்பதிவு செய்யுங்கள்
தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத்திட்டம்: இப்போதே முன்பதிவு செய்யுங்கள்...