2026 குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உயர் தொழில்நுட்ப முறையில் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டெல்லி காவல்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை பாதுகாப்புப் பணிகளில் பயன்படுத்த உள்ளது. இந்த கண்ணாடிகள், முககவசம், தொப்பி, தாடி, மீசை அல்லது தோற்ற மாற்றங்கள் இருந்தாலும் கூட சந்தேகநபர்களை அடையாளம் காணும் திறன் கொண்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது. இணைய இணைப்பு இல்லாமலேயே செயல்படும் இந்த ஏஐ கண்ணாடிகள், கணினி வழிமுறைகள் மூலம் தேடப்படும் நபர்களை கண்டறிய உதவும்.